Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர்.. வெறும் ரூ. 6,499 போதும்.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் அடுத்த பட்ஜெட் மாடலாக ஐடெல் ஏ90 (itel A90) சத்தமில்லாமல் களமிறங்கி இருக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 2 டிபி மெமரி, 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், எச்டிபிளஸ் டிஸ்பிளே மட்டுமல்லாமல், IP54 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. இந்த ஐடெல் ஏ90 போனின் முழு பீச்சர்கள் எப்படி? விலை எவ்வளவு? எங்கு விற்பனைக்கு வருகிறது? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஐடெல் ஏ90 அம்சங்கள் (itel A90 Specifications): இந்த ஐடெல் போனில் 6.6 இன்ச் (720 x 1612) பிக்சல்கள் ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 270 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

ஆளுக்கு 2 ஆர்டர்.. வெறும் ரூ. 6,499 போதும்.. 12GB ரேம்.. எந்த மாடல்?

மேலும், ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-On Display), ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்களுக்காக டைனாமிக் பார் (Dynamic Bar) போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் வெளியாகி இருந்தாலும், வெட் டச் (Wet Touch) மற்றும் ஆய்லி டச் (Oily Touch) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக ஆன்டி டிராப் கேஸ் (Anti-Drop Case) கிடைக்கிறது.

இந்த மாடலில் ஏவியான ஏஐ அசிஸ்டன்ட் (Aivana AI Assistant) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஐடெல் ஏ90 போனில் ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android 14 Go Edition) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி7100 (Octa Core UNISOC T7100) சிப்செட் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. ஆகவே, 12 ரேம் அவுட்புட் கிடைக்கும்.

ஆகவே, 12 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த போனுக்கு 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஐடெல் ஏ90 போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 10W சார்ஜர் கொடுக்கப்படுகிறது.

டைப்-சி சார்ஜிங் (Type-C Charging), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-facing Fingerprint Sensor) கிடைக்கிறது. மேலும், பேஸ் அன்லாக் (Face Unlock) மற்றும் ஜி சென்சார் (G Sensor) போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black), ஸ்பேஸ் டைட்டானியம் (Space Titanium), நெபுலா ப்ளூ (Nebula Blue) கலர்கள் வருகின்றன.

ஸ்லைடிங் ஜூம் பட்டன் (Sliding Zoom Button) சப்போர்ட் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. இதில் 13 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லைட் சென்சார் கிடைக்கிறது. ஏஐ என்ஹான்ஸ்டு செல்பீ சப்போர்ட் கொண்ட 5 எம்பி ஃப்ரன்ட் கேமரா கிடைக்கிறது. IP54 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.

இந்த ஐடெல் ஏ90 போனின் விலையை பார்க்கையில் 4 ஜிபி ரேம் +64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.6,499ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.6,999ஆகவும் இருக்கிறது. இப்போது, ஆப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் ஓரிரு நாட்களில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel A90 With 13MP Camera 4GB RAM 5000mAh Battery Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X