மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.6,399 ரேட்ல. மிலிட்டரி கிரேடு போன்.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அடிமட்ட பட்ஜெட்டில் MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மாடலாக ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் (itel A90 Limited Edition) களமிறங்கி இருக்கிறது. இதுபோக IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. மேலும், 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களும் வருகிறது. யுனிசோக் 7100 சிப்செட் கொண்ட இந்த ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரூ.10,000 விலை கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களிலேயே இப்போது மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் கிடைக்கிறது. ஆனால், ரூ.7,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு MIL-STD-810H சர்டிபிகேஷனை இந்த ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் கொடுக்கிறது. இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் முதல்முறையாக இந்த MIL-STD-810H சர்டிபிகேஷன் கிடைத்துள்ளதால், ஐடெல் பிரியர்கள் குஷியாகிவிட்டனர்.

ஆகவே, அடிமட்ட விலையில் அதிக டியூரபிலிட்டி கொடுக்கும் ரக்கட் மாடலாக இதை பார்க்க முடிகிறது. ஏற்கனவே, இந்தியாவில் ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆனால், இப்போது மிலிட்டரி கிரேடு புரொடெக்னுடன் அப்கிரேட் செய்யப்பட்டு, லிமிடெட் எடிஷனில் கிடைக்கிறது. ஆகவே, நீண்ட நாட்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்ய கிடைக்காது என்பது தெரிகிறது.
ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் அம்சங்கள் (itel A90 Limited Edition Specifications): இந்த லிமிடெட் எடிஷனில் MIL-STD-810H சர்டிபிகேஷன் கிடைப்பதால், டிராப் ரெசிஸ்டன்ட் மற்றும் ஷாக் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, நிற்கும் உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் புரொடெக்சன் கொடுக்கும். டஸ்ட், வாட்டர் மற்றும் வாட்டர் டிராப் ரெசிஸ்டன்ட் கொடுப்பதற்கு IP54 ரேட்டிங் கொடுக்கிறது.
இந்த ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் யுனிசோக் டி7100 எஸ்ஓசி (Octa Core Unisoc T7100 SoC) கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப ஆண்ட்ராய்டு 14 கோ (Android 14 Go) எடிஷன் ஓஎஸ் கிடைக்கிறது. 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் மற்றும் கூடுதல் மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைக்கிறது. ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போனை போலவே பாடி கொடுத்தாலும், கேமரா கிரிட் மாற்றப்பட்டுள்ளது. இது பிரீமியம் லுக் கொடுக்கும்படி லுக் கிடைக்கிறது. ஐடெல் ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக கிடைக்கும் டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் கிடைக்கிறது.
6.6 இன்ச் ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இந்த டைனாமிக் பார் பீச்சர் மூலம் பேட்டரி ஸ்டேட்டஸ், நோட்டிபிகேஷன் மட்டுமல்லாமல், பேஸ் அன்லாக் (Face Unlock) அக்சஸ் செய்ய கிடைக்கிறது. இதுபோக சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது.
இந்த ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷனின் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.6,399ஆகவும், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.6,899ஆகவும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்பேஸ் டைட்டானியம் (Space Titanium), ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black) மற்றும் அரோரா ப்ளூ (Aurora Blue) கலர்கள் உள்ளன. இப்போதைக்கு ரீடெயில் ஸ்டோர்களில் மட்டும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications