Home
Mobile

தீபாவளி ஆஃபரே ஆடிப்போச்சு.. ரூ.5,995 போதும்.. 5000mAh பேட்டரி.. 12GB ரேம்.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் (itel A90 Limited Edition) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 13 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஐவியானா ஏஐ அசிஸ்டன்ட், டிடிஎஸ் ஆடியோ மற்றும் யுனிசோக் டி7100 சிப்செட் கொண்ட இந்த ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷனின் முழு பீச்சர்கள் விலை மற்றும் தள்ளுபடி விவரங்கள் இதோ.

4 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.6,899ஆகவும், 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.6,399ஆகவும் இருக்கிறது. இப்பேது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் மாடலானது வெறும் ரூ.6,311 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலைக்கு எந்த கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளும் தேவையில்லை.

தீபாவளி ஆஃபரே ஆடிப்போச்சு.. ரூ.5,995 போதும்.. 5000mAh பேட்டரி.. 12GB!

இதுபோக குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.316 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.5,995 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த விலைக்கு IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட், வாட்டர் மற்றும் டிராப் ப்ரூப் மட்டுமல்லாமல், MIL-STD-810H சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கிறது. ஆகவே, ரூ.6,000 பட்ஜெட்டில் பிரீமியம் குவாலிட்டி மாடலாக இருக்கிறது.

இதுபோக ஏற்கனவே வெளியான ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போனைவிட கேமரா டிசைனில் அப்கிரேட் கிடைக்கிறது. இதன் மூலம் பிரீமியம் லுக் இந்த லிமிடெட் எடிஷனுக்கு கிடைக்கிறது. அரோரா ப்ளூ (Aurora Blue), ஸ்பேஸ் டைட்டானியம் (Space Titanium) மற்றும் ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்களை பார்க்கலாம்.

ஐடெல் ஏ90 அம்சங்கள் (itel A90 Specification): இந்த ஐடெல் ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 270 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 90 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180 Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுவொரு ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-On Display) மாடலாகும்.

தீபாவளி ஆஃபரே ஆடிப்போச்சு.. ரூ.5,995 போதும்.. 5000mAh பேட்டரி.. 12GB!

நேட்டிபிகேஷன்களுக்காக டைனாமிக் பார் (Dynamic Bar) கிடைக்கிறது. டிடிஎஸ் சரவுண்ட் சவுண்ட் (DTS Surround Sound) சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. 18 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கொடுக்கும். அதேபோல 35 நாட்களுக்கு ஸ்டாண்ட்பை பேக்கப் கிடைக்கும்.

இந்த ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனில் ஐவானா ஏஐ அசிஸ்டன்ட் (Aivana AI Assistant) கிடைக்கிறது. இதில் ஏஐ ரைட்டிங் அசிஸ்டன்ஸ் (AI Writing Assistance) மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் (Voice Assistance) கிடைக்கிறது. லைட் சென்சாருடன் 13 எம்பி ரியர் கேமரா கிடைக்கிறது. இதற்கு ஸ்லைடிங் ஜூம் பட்டன் கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

இதில் ஏஐ என்ஹான்ஸ்டு செல்பீ சப்போர்ட் கிடைக்கிறது. சைடு-பிங்கர்பிரிண்ட் மற்றும் பேஸ் அன்லாக் செக்யூரிட்டி கொடுக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டைப்-சி சார்ஜிங் மற்றும் 4ஜி கனெக்டிவிட்டி கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கோ எடிஷன் (Android 14 Go Edition) கிடைக்கிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி7100 சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel A90 Limited Edition With 4GB RAM Available Under Rs 6000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X