Home
Mobile

ஆர்டர் அள்ள போகுது.. ரூ.7,299 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 13MP கேமரா.. புது itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனம் தனது புதிய ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் (itel A90 Limited Edition) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 5000எம்ஏஎச் பேட்டரி, டிடிஎஸ் ஆடியோ, யுனிசாக் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் அம்சங்கள் (itel A90 Limited Edition Specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 90Hz refresh rate), 720 x 1612 பிக்சல்ஸ், 480 நிட்ஸ் பிரைட்னஸ், 180Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது.

ஆர்டர் அள்ள போகுது.. புது itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?

யுனிசாக் டி7100 ஆக்டா-கோர் (UNISOC T7100 Octa-Core) சிப்செட் உடன் ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

12ஜபி ரேம் (4ஜிபி ரேம் + 8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த புதிய ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஐடெல் போன். அதாவது 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

13எம்பி ரியர் கேமரா வசதியுடன் இந்த புதிய ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ஐடெல் ஸ்மார்ட்போனில் உள்ளன.

IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) ஆதரவு இந்த போனில் உள்ளது. மேலும் MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மாடலாக இந்த ஐடெல் போன் உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது. அதேபோல் ஃபேஸ் அன்லாக் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

3.5எம்எம் ஆடியோ ஜாக்(3.5mm audio jack), டிடிஎஸ் ஆடியோ (DTS audio) போன்ற வசதிகளுடன் இந்த ஐடெல் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android 14 Go Edition) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஐடெல் போன் வெளிவந்துள்ளது.

5000mAh பேட்டரி வசதியுடன் இந்த புதிய ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஐடெல் போனில உள்ளன.

புதிய ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,299-ஆக உள்ளது. தற்போது ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த போன் வாங்க கிடைக்கிறது. அதுவும் ஸ்பேஸ் டைட்டானியம், ஸ்டார்லிட் பிளாக் மற்றும் அரோரா ப்ளூ நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel A90 Limited Edition launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X