இதுதான் பட்ஜெட் வாசிகளின் கனவு போன்.. 4GB ரேம், iPhone கேமரா டிசைன், IP54, DTS சவுண்ட்.. எந்த மாடல்?
கடந்த மே மாதத்தில், ஐடெல் நிறுவனமானது ரூ.6,499 என்கிற சூப்பர் பட்ஜெட் விலையில் ஐடெல் ஏ90 (itel A90) என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது. இதற்கிடையில் இன்னும் ஸ்டைலான வடிவமைப்புடன் ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் (itel A90 Limited Edition) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
ஐடெல் நிறுவனமானது இதுகுறித்த டீசர் போட்டோவை (Teaser Photo) வெளியிட்டுள்ளது. அதன் வழியாக வரவிருக்கும் ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள ஐபோன் 17 சீரீஸில் ()iPhone 17 Series) இடம்பெறும் வடிவமைப்பை போலவே, ரீடிசைன் செய்யப்பட்ட ரியர் கேமரா ஹவுசிங்கை (Redesigned rear camera housing) கொண்டுள்ளது.

பார்ப்பதற்கு பிரீமியம் லுக்கை வழங்கினாலும் கூட இந்த ஸ்மார்ட்போன் அதன் மலிவு விலையை தக்கவைத்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தூசி பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு மற்றும் வீழ்ச்சி பாதுகாப்பு (ட்ராப் ப்ரொடெக்ஷன்) ஆகியவற்றை குறிக்கும் ஐடெல்லின் 3பி வாக்குறுதி ஆனது இந்த ஸ்மார்ட்போனை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது.
ஐபி54 ரேட்டிங்கை பெறுவதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் அதன் விலைப்பிரிவில் மிகவும் நீடித்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக மாறும். மேலும் ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது ஐடெல்லின் பில்ட்-இன் ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆன ஐவானாவையும் கொண்டியூர்க்கும்
ஐவானா ஆனது கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்கவும், கேலரியில் இருந்து படங்களை விவரிக்கவும், வாட்ஸ்அப் கால்களை மேற்கொள்ளவும் மற்றும் சிக்கலான கணிதத்தை தீர்க்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ஸ் அசிஸ்டென்ட் - மலிவு விலையில் ஸ்மார்ட் செயல்பாட்டை தேடும் பயனர்களுக்கு அன்றாட பணிகளை எளிதாக்கும் நோக்கம் கொண்டது.
மேலும் ஐடெல் ஏ90 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது டிடிஎஸ் சவுண்ட் தொழில்நுட்பம் (DTS sound technology) மூலம் மேம்படுத்தப்பட்ட ஆடியோவை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இசை, கேமிங் மற்றும் வீடியோ பிளேபேக் அனுபவங்களை மேம்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் வகைகளில் வரும் என்று வதந்தி பரவியுள்ளது. இந்த 2 ரேம் ஆப்ஷன்களுமே 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை ஆப்ஷன் உடன் வரும். ஆக நிச்சயம் இது மிகவும் மலிவான ஸ்மார்ட்போனாக.. பட்ஜெட் வாசிகளின் கனவு ஸ்மார்ட்போன் ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது. அறிமுகத்தை பொறுத்தவரை இது 2025 செப்டம்பரில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஐடெல் நிறுவனம் ஆனது ரூ.899 க்கு 30 மணிநேர பேட்டரி, 360 டிகிரி BASS, IPX5 ரேட்டிங், AI ANC ஆகிய அம்சங்களை வழங்கும் ஐடெல் எஸ்9 ஸ்டார் (Itel S9 Star) என்கிற புதிய இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது
அதற்கும் முன்பாக ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் 2 புதிய ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது: ஐடெல் ஆல்பா எட்ஜ் (itel Alpha Edge) மற்றும் ஐடெல் ஆல்பா ஸ்டைல் (itel Alpha Style). இந்த இரண்டு மாடல்களுமே இலவச ஸ்னாப்-ஆன் ப்ரொடெக்ஷன் கேஸ் (Snap-on protective case) உடன் வருகின்றன.
ஐடெல் எஸ்9 ஸ்டார் வயர்லெஸ் இயர்பட்ஸ் விலையை பொறுத்தவரை இந்தியாவில் இது ரூ.899 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியா முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகளின் வழியாக பிளாக், மிட்நைட் ப்ளூ, பிரவுன் மற்றும் ஒயிட் (Black, Midnight Blue, Brown and White) ஆகிய 4 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








