Home
Mobile

வெளுத்து விட்டாப்ல.. ரூ.6,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 8GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்றபடி வெறும் ரூ.6,999 விலைக்கு 50 எம்பி எச்டிஆர் கேமரா, 8 ஜிபி ரேம், 2 டிபி மெமரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் ஓஎஸ் மற்றும் யுனிசோக் டி603 சிப்செட்டுடன் ஐடெல் ஏ80 (itel A80) போன் வெளியாகி இருக்கிறது. சத்தமே இல்லாமல், வெளியீடு நடந்திருக்கிறது. இந்த ஐடெல் ஏ80 போன் எங்கு ஆர்டருக்கு கிடைக்கிறது? ஆன்லைன் மார்கெட்டில் கிடைக்குமா? உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஐடெல் ஏ80 அம்சங்கள் (itel A80 Specifications): இந்த ஐடெல் போனில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே வருகிறது. இந்த பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவில் (Punch-Hole Display) 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் கிடைக்கிறது.

வெளுத்து விட்டாப்ல.. ரூ.6,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 8GB ரேம்.. மாடல்?

இந்த பீச்சர் மூலம் பேட்டரி ஸ்டேட்டஸ், காலிங் மற்றும் அன்லாக்கிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த அடிமட்ட பட்ஜெட்டில் ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android 14 Go Edition) மற்றும் ஐடெல் ஓஎஸ் 14 (itel OS 14) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி603 எல்டிஇ (Octa Core Unisoc T603 LTE) சிப்செட் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது.

ஆகவே, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொடுக்கிறது. 2 டிபிக்கான கூடுதல் மெமரி சப்போர்ட் இருக்கிறது. ஆகவே, மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) மற்றும் டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) இருக்கிறது. சூப்பர் எச்டிஆர் (Super HDR) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா (Secondary Camera) இருக்கிறது.

இந்த டூயல் ரியர் கேமராவில் (Dual Rear Camere) ரிங் லைட் (Ring Light) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த கேமராவில் ஆட்டோமேட்டிக் சீன் கிளாசிபிகேஷன் (Automatic Scene Classification) மற்றும் கிரியேட்டிவ் ஃபில்டர்கள் (Creative Filters) வருகின்றன. இந்த ஐடெல் ஏ80 போனில் 8 எம்பி போர்ட்ராய்டு செல்பீ ஷூட்டர் வருகிறது. கேமரா பீச்சர்களும் இருக்கின்றன.

ஆகவே, எச்டிஆர் ப்ரோபஸ்னல் மோட் (HDR Professional Mode), கிளியரர் பேக்லைட் போட்டோஸ் (Clearer Backlight Photos), கேமரா பியூட்டி (Camera Beauty) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 1-2 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 4 வருடங்களுக்கான பேட்டரி லைப்பேன் கிடைக்கிறது.

இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) மற்றும் அல்ட்ரா பவர் சேவிங் மோட் (Ultra Power Saving Mode) சப்போர்ட் கிடைக்கிறது. 8.54 மிமீ தடிமனில் ஓரளவுக்கு ஸ்லிம் பாடி கொடுக்கிறது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) மற்றும் ஃபேஸ் சென்சார் (Face Sensor) வருகிறது. இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது.

ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கவில்லை. ஆஃப்லைன் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்க இருக்கிறது. இந்த ஐடெல் ஏ80 போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 6,999ஆக இருக்கிறது. ஒயிட் (White), ப்ளூ (Blue) மற்றும் பிளாக் (Black) கலர்களில் வெளியாகி இருக்கிறது. ஆன்லைன் ஸ்டோர்களில் விரைவில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel A80 With 50MP Camera 4GB RAM 5000mAh Battery Check India Launch Specifications And Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X