Home
Mobile

ரூ.10,000 க்கு புது 5G மாடல் வந்ததும்.. ரூ.2000 விலை குறைப்பை பெற்ற ஐடெல் ஸ்மார்ட்போன்!

இந்தியாவில் ரூ.10,000 பட்ஜெட்டில் ஐடெல் ஏ95 5ஜி (itel A95 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் ஐடெல் ஏ80 (itel A80) ஸ்மார்ட்போன் அபாரமான விலை குறைப்பை பெற்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அமேசானில் தற்போது ஐடெல் ஏ80 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் 22% நேரடி தள்ளுபடியை பெற்று அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.8,999 க்கு பதிலாக வெறும் ரூ.6,997 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.2002 விலை குறைப்பை பெற்று உள்ளது.

ரூ.2000 விலை குறைப்பை பெற்ற ஐடெல் ஸ்மார்ட்போன்!

ஐடெல் ஏ80 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (itel A80 Major Specifications):
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate)
- 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (Peak Brightness)
- 6.7 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (HD Plus IPS Display )
- ஆக்டா-கோர் யூனிசாக் டி603 சிப்செட் (UniSoc T603 Chipset)
- ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android 14 Go Edition)
- மூன்று ஆண்டுகள் (36 மாதங்கள்) வரை லேக்-ஃப்ரீ செயல்திறன் (Lag Free Performance)

- எச்டிஆர் ஆதரவு (HDR Support) உடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- டைனமிக் பார் அம்சம் (Dynamic Bar Feature)
- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வழியாக 10W வயர்டு சார்ஜிங் ஆதரவு
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்காக ஐபி54 ரேட்டிங் (IP 54 Rating)
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor)

ஐடெல் ஏ95 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் (itel A95 5G Price in India and Sale Details): புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐடெல் ஏ95 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் மற்றும் கலர் ஆப்ஷன்கள் அறிவிக்கப்பட்டு விட்டாலும் கூட, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழியிலான விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது பிளாக், கோல்ட் மற்றும் மின்ட் ப்ளூ ஆகிய கலர் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.9,599 என்றும், அதே நேரத்தில் 6ஜிபி ரேம் + 128ஜிப் வேரியண்ட்டின் விலை ரூ.9,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 00 நாட்களுக்குள் இலவச திரை மாற்று சலுகையுடன் விரைவில் ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள் மூலம் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் எப்போது முதல் வாங்க கிடைக்கும் என்கிற தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஐடெல் ஏ95 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (itel A95 5G Major Specifications):
- டூயல் சிம் (Dual SIM)
- 1600 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 Chipset)
- ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஐடெல் ஓஎஸ் 14
- 50எம்பி ரியர் கேமரா
- டெப்த் சென்சார் (எப்/2.4)
- ஒரு ஏஐ லென்ஸ்
- டூயல் எல்இடி ஃபிளாஷ் (dual LED flash)
- 8எம்பி செல்பீ கேமரா
- 10W சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரி
-ஐபி54 ரேட்டிங் (IP 54 Rating)

More from GizBot

Best Mobiles in India

English summary
itel A80 Selling At Big Discount Price in Amazon After New itel A95 5G Launched In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X