கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. வெறும் ரூ.8000 போதும்.. 256GB மெமரி.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. எந்த போன்?
ஐடெல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் ஐடெல் நிறுவனம் வரும் வாரங்களில் ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
குறிப்பாக இந்த ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன் ஆனது 256ஜிபி மெமரி உடன் ரூ.8000-க்கு கீழ் உள்ள முதல் ஸ்மார்ட்போன்-ஆக இருக்கும் என்று ஐடெல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை 256ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனை ரூ.8000-க்கு கீழ் எந்த நிறுவனமும் அறிமுகம் செய்யவில்லை. எனவே கம்மி விலையில் 256ஜிபி மெமரி உடன் ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஐடெல் ஏ70 அம்சங்கள் (itel A70 Specifications): 6.6-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் நோக்கியா ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் சிப்செட் தான் இந்த ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போனிலும் இடம்பெற உள்ளது. அதாவது யுனிசாக் டி603 சிப்செட் (Unisoc T603 SoC) வசதியுடன் இந்த அட்டகாசமான ஐடெல் ஏ70 மாடல் அறிமுகமாகும். மேலும் ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) (Android 13 (Go Edition)) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் போன்.
3ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
13எம்பி பிரைமரி கேமரா + 0.3எம்பி செகண்டரி லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் ஃபேஸ் அன்லாக் (Face unlock) வசதியும் உள்ளன.
அதேபோல் 4ஜி எல்டிஇ ஆதரவு, 3.5எம்எம் ஆடியோ ஜாக், புளூடூத் வி5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் தனித்துவமான அம்சங்களுடன் கம்மி விலையில் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








