ஆர்டர் அடிச்சு தூக்கும்.. ரூ.7,000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?
இந்திய மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் 12ஜிபி ரேம், 2டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி, ஏஐ கேமரா போன்ற அம்சங்களுடன் ஐடெல் ஏ70 (itel A70) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விற்பனை, விலை விவரங்கள் இதோ.
ஐடெல் ஏ70 அம்சங்கள் (itel A70 Specifications): இந்த ஐடெல் போன் 6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 120Hz டச் சாம்பிளிங் ரேட் சப்போர்ட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதுமட்டுமல்லாமல் டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் கொண்டிருக்கிறது.

இந்த பீச்சர் மூலம் சார்ஜிங் அனிமேஷன், காலிங் அனிமேஷன் மற்றும் பேஸ் அன்லாக்கிங் அனிமேஷன் ஆகியவற்றை பார்த்து கொள்ளலாம். இந்த ஐடெல் போனில் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go Edition) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி603 1 என்எம் (Octa Core Unisoc T603 12nm) சிப்செட் வருகிறது.
அதோடு ஐடெல் ஓஎஸ் 13 (itel OS 13) சப்போர்ட் வருகிறது. அதுமட்டுமல்லாமல், மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஐடெல் ஏ70 போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா + AI லென்ஸ் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது.
இந்த கேமராவில் எச்டிஆர் சப்போர்ட் வருகிறது. இந்த போனில் 4 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதேபோல 12 ஜிபி ரேம் + 64 ஜிபி வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது.

அதோடு 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ஐடெல் ஏ70 போனில் டைப்-சி (Type-C) சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) செக்யூரிட்டி சப்போர்ட் வருகிறது.
பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audia Jack) கொண்டுள்ளது. இந்த ஐடெல் ஏ70 போன் 8.6 தடிமனுடன் ஸ்லிம் டிசைன் கொண்டிருக்கிறது. அதோடு பிரில்லியண்ட் கோல்டு (Brilliant Gold), ஸ்டைலிஷ் பிளாக் (Stylish Black), ஃபீல்ட் கிரீன் (Field Green) மற்றும் அஸூர் ப்ளூ (Azure Blue) ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.6299ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.6799ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 4 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.7,299ஆகவும் இருக்கிறது.
அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதுவொரு 4ஜி போனாகும். இவ்வளவு மலிவான விலையில், 12 ஜிபி ரேம், 2 டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் வருவதால், பட்ஜெட் பிரியர்களிடையே நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








