ஆளுக்கு ஒன்னு வாங்கலாம்.. டூயல் கேமரா.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது புது itel போன்.. எந்த மாடல்?
ஐடெல் நிறுவனம் இந்தியாவில் கம்மி விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருிகறது. அதாவது இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஐடெல் நிறுவனம் சத்தமின்றி ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஐடெல் நிறுவனம் தற்போது ஐடெல் ஏ70 (itel A70) எனும் ஸ்மார்ட்போனை தான் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் (HD+ display ) இந்த ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் (500 nits brightness), 120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (120Hz touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின டிஸ்பிளே தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும்.
சக்திவாய்ந்த யுனிசாக் டி603 ஆக்டோ-கோர் பிராசஸர் (Unisoc T603 Octa-core Processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் கொடுக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ஐடெல் ஏ70 வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த
ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கம்
என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது. குறிப்பாக 4ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256ஜிபி மெமரி
வசதியைக் கொண்டுள்ளது ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (microSD support) ஆதரவு இதில் உள்ளது,
5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.
ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக
உள்ளது.

சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) மற்றும் ஃபேஸ் அன்லாக் ( Face unlock) வசதியைக் கொண்டுள்ளது ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன். மேலும் 4ஜி (4G), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (Type-C), 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஐடெல் ஸ்மார்ட்போன்.
ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன் பிரில்லியன்ட் கோல்ட் (Brilliant Gold), ஸ்டைலிஷ் பிளாக் (Stylish Black), ஃபீல்ட் கிரீன் (Field Green) மற்றும் அஸூர் ப்ளூ (Azure Blue) நிறங்களில் வெளிவநதுள்ளது. அதேபோல் இந்த போன் ரூ.7,490 விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போனின் விற்பனை தேதியை வெளியிடவில்லை ஐடெல் நிறுவனம். இருந்தபோதிலும் ஐடெல் ஏ70 போன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








