2 போன் வாங்குவீங்க! ரூ.7,000 போதும் 8GB ரேம், 5000mAh பேட்டரி! எந்த மாடல்?
இந்தியாவில் மலிவு விலை போன்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதை மறுக்க முடியாது. பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், ரூ.10 ஆயிரம் பட்ஜெட்டில் பக்கவான அம்சங்களுடன் போன்களை களமிறக்கிவருகிறது. ஆனால், ஐடெல் (itel) நிறுவனம், இந்த பட்ஜெட்டை விட குறைவான விலையில் போன்களை விற்பனை செய்துவருகிறது.
இருப்பினும், அம்சங்களில் சமரசம் செய்யாமல், நியாமான டிஸ்பிளே, ரேம், கேமரா, பேட்டரியை கொடுத்து வருகிறது. இந்த வரிசையில், வெறும் ரூ.7 ஆயிரம் பட்ஜெட்டில் ஐடெல் ஏ60 எஸ் (itel A60S) போனை விற்பனைக்கு கொண்டுவருகிறது. இந்த போன், ஆப்பிரிக்காவில் வெளியாகி விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்போது, இந்தியாவில் வெளியாக உள்ளது.

எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே, 8 ஜிபி ரேம், யுனிசோக் சிப்செட், 5000mAh பேட்டரி என்று அம்சங்களிலும் பின்னி எடுக்கிறது. இந்த போனின் அம்சங்கள் அமேசானில் (Amazon) கசிந்துள்ளன. ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் இந்த போனை வாங்கலாமா? மொத்த அம்சங்கள் எப்படி இருக்கிறது? எப்போது வெளியாகும் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பின்வருமாறு.
ஐடெல் ஏ60 எஸ் அம்சங்கள் (itel A60S Specifications): இந்த ஐடெல் போன் 6.6 இன்ச் (720*1600 பிக்சல்ஸ்) எச்டிபிளஸ் ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த போனில் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) வருகிறது.
4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) என்று 8 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியும், மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட்டும் உள்ளது. யுனிசோக் எஸ்சி9863ஏ1 (Unisock SC9863A1) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 அல்லது 13 ஓஎஸ் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. 8 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொடுக்கப்படலாம். 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 5000mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த பேட்டரியில் 5W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த போன் கடந்த மாதம் ஆப்பிரிக்காவில் வெளியானது.
அப்போது, வெறும் ரூ.6,000 பட்ஜெட்டில் வெளியானது. இப்போது, அமேசானில் வெளியான டீசர் மூலம், இந்தியாவிலும் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த புதிய ஐடெல் போன் ரூ.7000 பட்ஜெட்டில் வெளியாகும். இவ்வளவு குறைவான விலைக்கு 8 ஜிபி ரேம் கொண்ட போன் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
ஷேடோ பிளாக் (Shadow Black), சன்ஷைன் கோல்டு (Sunshine Gold), மூன்லைட் வயலட் (Moonlit Violet), கிளேசியர் கிரீன் (Glacier Green) ஆகிய நான்கு கலர்களில் வெளியாக இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் அமேசானில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








