அனல் பறக்கும் விற்பனை.. வெறும் ரூ.6,299 போதும்.. 8GB ரேம், 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசானில் (Amazon) வெறும் ரூ.6000 பட்ஜெட்டில் முதல்முறையாக 8ஜிபி ரேம், 5,000mAh பேட்டரி, 120Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட டிஸ்பிளே என்று ரூ.15,000 மதிப்புள்ள போன்களின் அம்சங்களுடன் ஐடெல் ஏ60 எஸ் ( itel A60S) போன் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்தியாவில் மலிவு விலை போன்களுக்கான வரவேற்பு, எப்போதும் அதிகம் என்பதால், பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவங்கள் ரூ.10000 பட்ஜெட்டுக்குள் நல்ல நல்ல அம்சங்களை கொண்ட புதிய போன்களை களமிறக்கி வருகின்றன. ஆனால், ஐடெல் (itel) நிறுவனம், அந்த ரூ.10000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு போன்களை களமிறக்கி விற்பனையை படுஜோராக மாற்றி வருகிறது.

அப்படி வெறும் ரூ.6000 பட்ஜெட்டில் வியந்துபோகும் வகையிலான அம்சங்களை கொடுத்து, ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களின் கவனத்தையும் இப்போது, ஈர்த்துவிட்டது. இந்த போனின் ப்ரீ-புக்கிங்கே மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இப்போது விற்பனை தொடங்கி மிகப்பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த போனின் முழு அம்சங்கள் தெரிந்துகொள்வோம்.
ஐடெல் ஏ60 எஸ் அம்சங்கள் (itel A60S Specifications): இந்த ஐடெல் போன் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட 6.6 இன்ச் (720x1612 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது.
4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது. மொத்தமாக 8 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. இதோடு மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் உள்ளது. யுனிசோக் எஸ்சி9863ஏ1 (Unisoc SC9863A1) சிப்செட் வருகிறது.
ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐடெல் ஏ60 எஸ் போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில், 8 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனின் எதிர்பார்ப்பை எகிற வைத்த 5000mAh பேட்டரி 10W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பேஸ் அன்லாக் (Face Unlock), ரியர் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Rear Fingerprint Sensor) போன்ற முக்கிய அம்சங்களும் வருகின்றன.
இந்த போனுக்கு ஒரு வருட ஸ்கீரின் ரீபிளேஸ்மென்ட் வாரண்டி வருகிறது. ஷேடோ பிளாக் (Shadow Black), மூன்லைட் வயலட் (Moonlit Violet), சன்ஷைன் கோல்டு (Sunshine Gold), கிளேசியர் கிரீன் (Glacier Green) ஆகிய நான்கு கலர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அமேசானில் வெறும் ரூ.6,299 விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான் பிரைம் கஸ்டமர்களுக்கு ஜூலை 13ஆம் தேதி முதலே ப்ரீ-புக்கிங் தொடங்கிவிட்டதால் விற்பனை சக்கைபோடு போட்டு வருகிறது. வெறும் ரூ.6,000 பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம், 5,000mAh பேட்டரி போன் விற்பனைக்கு வருவது முதல்முறை என்பதால், ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.
மிகவும் கம்மி பட்ஜெட்டில் நல்ல பேட்டரி பேக்கப் கொண்ட போனை வாங்க வேண்டும் என்றால், இந்த போனை வாங்கலாம். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








