Home
Mobile

இவ்ளோ கம்மியா? அதிரும் மார்க்கெட்! ரூ.6,499 விலையில் 8GB ரேம், 5000mAh பேட்டரி! எந்த போன்?

இந்திய மார்க்கெட்டில் வெறும் ரூ.6,499 விலையில் 8 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி, ஏஐ கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட மிட்-ரேன்ஞ் அம்சங்களுடன் வெளியாகும் முதல் போனாக ஐடெல் (itel) நிறுவனத்தின் ஐடெல் ஏ60 எஸ் (itel A60S) மாடல் இருக்கப்போகிறது.

ஐடெல் என்னும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம், மலிவு விலை போன்களுக்கு மிகவும் பிரபலமானது. ஏனென்றால், ரூ.10,000 பட்ஜெட்டை விட குறைவான விலையில், அசத்தலான அம்சங்களுடன் புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறது. இப்போது, இந்திய மார்க்கெட்டில் ஐடெல் ஏ60 எஸ் போனுடன் அதிரடி காட்ட வருகிறது.

அதிரும் மார்க்கெட்! ரூ.6,499 விலையில் 8GB ரேம், 5000mAh பேட்டரி போன்

இந்த ஐடெல் ஏ60 எஸ் போன் ரூ.15,000 மதிப்புள்ள போன்களில் இருக்கும் அம்சங்களை கொண்டிருக்கிறது. ஆனால், மலிவு விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த போன் எப்போது விற்பனைக்கு வரும்? மற்ற அம்சங்கள் எப்படி இருக்கிறது? எந்த தளத்தில் வாங்க முடியும்? உள்ளிட்ட விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ஐடெல் ஏ60 எஸ் போனில் என்ன எதிர்பார்க்கலாம்: இந்த ஐடெல் போன் முதலில் நைஜீரியாவில் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனையில் சக்கைப்போடு போட்டது. இப்போது, அதே அம்சங்களுடன் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனில் 6.6 இன்ச் எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) என்று மொத்தமாக 8 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. அதோடு 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியும், மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட்டும் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் உடன் யுனிசோக் எஸ்சி9863ஏ1 (Unisock SC9863A1) சிப்செட் வருகிறது.

இந்த ஐடெல் ஏ60 எஸ் போனில் பேக் மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Back-Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் விற்பனைக்கு வருகிறது. அந்த வகையில் 8 எம்பி ஏஐ (AI) மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் (Ultrawide Lens) வருகிறது. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் வெறும் ரூ.6,000 பட்ஜெட்டில் வெளியானது. இப்போது, அமேசானில் ரூ.6,499 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த போனின் விற்பனை வரும் ஜூலை 12ஆம் தேதி தொடங்குகிறது. ஷேடோ பிளாக் (Shadow Black), சன்ஷைன் கோல்டு (Sunshine Gold), மூன்லைட் வயலட் (Moonlit Violet), கிளேசியர் கிரீன் (Glacier Green) ஆகிய நான்கு கலர்களில் வெளியாக இருக்கிறது.

இவ்வளவு குறைவான விலையில் 8 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி போன் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel A60s Price Specifications 8GB RAM Phone Under 7000 in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X