மார்க்கெட்டே அதிருது.. ரூ.6,499 பட்ஜெட்டில் 8GB ரேம், 5000mAh பேட்டரி.. புரட்டியெடுக்கும் ப்ரீ-புக்கிங்!
அமேசானில் (Amazon) வெறும் ரூ.6,499 விலையில், 8ஜிபி ரேம், 5000mAh பேட்டரி கொண்ட ஐடெல் ஏ60 எஸ் (itel A60S) போனின் ப்ரீ-புக்கிங் தொடங்கிவிட்டது. இந்தியாவிலேயே கம்மியான பட்ஜெட்டில் அதிகமான அம்சங்களுடன் வெளியாகும் முதல் போன் என்பதால் ஆர்டர் படுஜோராக இருக்கப்போகிறது.
இந்தியாவில் ஐடெல் நிறுவனத்துக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. ஏனென்றால், ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் மட்டுமே, இந்த நிறுவனம் போன்களை வெளியிட்டு வருகிறது. ஆனால், அந்த போன்களின் அம்சங்களை பார்த்தால், ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான விலைக்கு விற்கும் போன்களுக்கு நிகராக இருக்கிறது.

இந்த சூழலில், அமேசான் பிரைம் டே சேல் (Amazon Prime Day Sale) நாட்களில் ஐடெல் நிறுவனம், தனது ஐடெல் பி40 பிளஸ் மற்றும் ஐடெல் ஏ60 எஸ் மாடல்களை விற்பனைக்கு களமிறக்கப்போவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, அந்த போன்களின் அம்சங்களும் வெளியாகி மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டது. இந்த எதிர்ப்பின் போதே, ஐடெல் ஏ60 எஸ் போனின் ப்ரீபுக்கிங் தேதி வெளியாகியிருக்கிறது.
ஐடெல் ஏ60 எஸ் அம்சங்கள் (itel A60S Specifications): இதுவொரு 4ஜி மாடல் போனாகும். இதில் 6.6 இன்ச் (720*1612 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12) கொண்ட யுனிசோக் எஸ்சி9863ஏ1 (Unisoc SC9863A1) சிப்செட் வருகிறது. 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. அதோடு மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஐடெல் போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது. 8 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பேக் மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார், பேஸ் அன்லாக் உள்ளிட்ட சிறப்பம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
மூன்லைட் வயலட் (Moonlit Violet), சன்ஷைன் கோல்டு (Sunshine Gold), ஷேடோ பிளாக் (Shadow Black), கிளேசியர் கிரீன் (Glacier Green) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு வருகிறது. அமேசானில் வெறும் ரூ.6,499 விலையில் நாளை (ஜூலை 14) முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. இருப்பினும், அமேசான் பிரைம் கஸ்டமர்களுக்கு இன்று (ஜூலை 13) முதலே ப்ரீ-புக்கிங் தொடங்கிவிட்டது.
இவ்வளவு மலிவான விலையில் 8 ஜிபி ரேம், 5,000mAh பேட்டரி போன் விற்பனைக்கு வந்தால், வரவேற்பு அமோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








