Home
Mobile

ஆர்டர் மிரளும்.. வெறும் ரூ.5599 பட்ஜெட்ல AI கேமரா.. 4000mAh பேட்டரி.. 5W சார்ஜிங்.. LCD டிஸ்பிளே.. எந்த மாடல்?

வெறும் ரூ.6000 பட்ஜெட்டுக்குள் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மட்டுமல்லாமல், 5W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4000mAh பேட்டரி, எச்டி ரெசொலூஷன் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 2 ஜிபி விர்ச்சுவல் ரேம், 2 டிபி மைக்ரோஎஸ்டி சிலாட், 8 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் ஐடெல் ஏ50சி (itel A50C) போன் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 கொண்ட மலிவு விலை போன்களில் டைனாமிக் பார் டிஸ்பிளேவுடன் தனியிடம் பிடித்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

போக்கோ, ரியல்மி, ரெட்மி போன்ற நிறுவனங்களுக்கு நிகராக மலிவு விலை போன்களில் புதுப்புது பீச்சர்களை கொடுத்து பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களை ஐடெல் நிறுவனம் கவர்ந்து வருகிறது. ஐபோன்களில் வரும் டைனாமிக் ஐலேண்ட் பீச்சர்களை ரூ.7000 பட்ஜெட்டுக்கும் கீழ் கிடைக்கும் மாடல்களில் கொடுத்து பட்டையை கிளப்புகிறது.

ஆர்டர் மிரளும்.. வெறும் ரூ.5599 பட்ஜெட்ல AI கேமரா.. 4000mAh பேட்டரி!

இப்போது, அதே பீச்சருடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் ஆக்டா கோர் சிப்செட் உடன் ஐடெல் ஏ50சி மாடலை களமிறக்கி இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமல்லாமல், டிசைனிலும் ஐடெல் ஏ50சி மாடல் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்களை பேக் செய்துள்ளது என்பதை முதலில் பார்த்து விடுவோம்.

ஐடெல் ஏ50சி அம்சங்கள் (itel A50C Specifications): முன்பே சொன்னது போல, டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த பீச்சர் மூலம் சார்ஜிங், காலிங் மற்றும் ஸ்கிரீன் அன்லாக் போன்ற நோட்டிபிகேஷன்களை பார்த்து கொள்ளலாம். இருப்பினும், வாட்டர் டிராப் டிசைன் (Water-drop Design) மட்டுமே கொண்டிருக்கிறது.

எச்டி (HD) ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) டிஸ்பிளே உள்ளது. மேலும், 267 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. ஆகவே, பட்ஜெட்டைவிட கூடுதல் டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android 14 Go Edition) மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் உள்ளது.

ஆர்டர் மிரளும்.. வெறும் ரூ.5599 பட்ஜெட்ல AI கேமரா.. 4000mAh பேட்டரி!

மலிவு விலை போன்களில் கொடுக்கப்படும் ஆக்டா கோர் யுனிசோக் டி603 12என்எம் (Octa Core Unisoc T603 12nm) சிப்செட் வருகிறது. 2 ஜிபி ரேம் + 2 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 32 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. மேலும், எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) மற்றும் டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) வருகிறது.

பட்ஜெட்டில் வெளியானதால், சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. 8 எம்பி ஏஐ கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த ஐடெல் ஏ50சி போனானது சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side Mounted Fingerprint), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) மற்றும் ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

5W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4000mAh பேட்டரி வருகிறது. டைப்-சி சப்போர்ட் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் வருகிறது. 1 வருடத்துக்கு இலவச ஸ்கிரீன் ரீபிளேஸ்மெண்ட் கொடுக்கப்படுகிறது. பிளாக் (Black), ப்ளூ (Blue), கோல்டன் (Golden) மற்றும் கிரீன் (Green) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அமேசான் தளத்தில் ஆர்டருக்கு வர இருக்கிறது.

இந்த ஐடெல் 50சி மாடலுக்கு ரூ. 5599ஆக விலை நிர்ணயம் இருக்கிறது. இந்த போனின் விற்பனை மற்றும் அறிமுக சலுகை விவரங்கள் வெளியாகவில்லை. வரும் நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது. மிகவும் மலிவான விலையில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வேண்டுமானால், இந்த ஐடெல் 50சி மாடலை ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel A50C With 4GB RAM 4000mAh Battery Launched Under Rs 6000 Sale From Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X