யாரு சாமி அவன்.. வெறும் ரூ.6,499 போதும்.. 2TB மெமரி.. AI கேமரா.. 5000mAh பேட்டரி.. IPS டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே தனியிடம் பிடித்திருக்கும் ஐடெல் நிறுவனம், அடுத்த பட்ஜெட் போனை களமிறக்கி இருக்கிறது. வெறும் ரூ.6,499 பட்ஜெட்டில் ஐடெல் ஏ50 (itel A50) மாடலை கொண்டு வந்துள்ளது. இந்த மலிவு விலை போனில் ஏஐ கேமரா, 2 டிபி மெமரி, 5000mAh பேட்டரி, ஐபிஎஸ் டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வருகிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் இந்த ஐடெல் ஏ50 போனின் முழு விவரங்கள் இதோ.
இந்த ஐடெல் போன் கிட்டத்தட்ட ஐடெல் 70 மாடலை போலவே டிசைன் கொண்டிருக்கிறது. அதேபோல டைனாமிக் பார் பீச்சர், விர்ச்சுவல் ரேம் போன்ற பீச்சர்களையும் கவர் செய்துள்ளது. ஆனால், ஐடெல் 70 மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வருகிறது. இதனாலேயே இந்த போனுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

ஐடெல் ஏ50 அம்சங்கள் (itel A50 Specifications): இந்த ஐடெல் மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கோ எடிஷன் (Android 14 Go Edition) வருகிறது. அதேபோல ஆக்டா கோர் யுனிசோக் டி603 12என்எம் (Octa-core Unisoc T603 12என்எம்) சிப்செட் மற்றும் பட்ஜெட் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
3 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்க இருக்கின்றன. இதுபோக 2 டிபி வரையிலான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் கொண்டிருக்கிறது.
ஐடெல் ஏ70 போனில் வந்த டிஸ்பிளே பீச்சர்கள் இந்த மாடலிலும் வருகின்றன. ஆகவே, பேட்டரி, வாய்ஸ் கால் நோட்டிபிகேஷன்களுக்கான டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் உள்ளது. 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 267 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

மேலும், 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டி (HD) ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த ஐடெல் ஏ50 போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வரவில்லை. ஆகவே, டைப்-சி (Type-C) சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி மட்டும் வருகிறது. இந்த பேட்டரியுடன் 8.7 மிமீ தடிமன் மற்றும் 163 கிராம் எடை கொண்டிருக்கிறது. ஆகவே, ஸ்லிம் டிசைனில் இந்த போனை எதிர்பார்க்கலாம்.
கேமராவை பொறுத்தவரையில், ஏஐ டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது. 8 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் இடம்பெற்றுள்ளது. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. மேலும், மலிவு விலை போன்களில் வரும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) வருகிறது. இருப்பினும், பேஸ் அன்லாக் (Face Unlock) இடம்பெற்றுள்ளது.
டூயல் 4ஜி வோஎல்இடி கனெக்டிவிட்டி வருகிறது. பிளாக் (Black), ப்ளூ (Blue), கோல்டு (Gold) மற்றும் கிரீன் (Green) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ஐடெல் ஏ50 போனின் விலை ரூ.6,499 ஆக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. தேதி அறிவிக்கப்படவில்லை. அடுத்த சில நாட்களில் தேதி வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








