Home
Mobile

ஆர்டர் மிரளும்.. ரூ.7000 பட்ஜெட்ல 6.6 இன்ச் டைனாமிக் டிஸ்பிளே.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக ஐடெல் ஏ50 சீரிஸ் (itel A50 Series) போன்கள் வெளியாக இருக்கின்றன. ஐடெல் 50 (itel A50) மற்றும் ஐடெல் 50சி (itel A50C) ஆகிய 2 மாடல்கள் வர வாய்ப்புள்ளது. இந்த போன்கள் ரூ.7000 பட்ஜெட்டில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பீச்சர்கள் வெளியாவில்லை. இருப்பினும், குளோபல் மார்கெட்டில் இந்த போன்களின் பீச்சர்கள் வெளியாகிவிட்டன. ஆகவே, இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஐடெல் ஏ50 அம்சங்கள் (itel A50 Specifications): இந்த ஐடெல் போனில் டைனாமிக் பார் (Dynamic Bar) சப்போர்ட் கொண்ட 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டி ரெசொலூஷன் வருகிறது.

ஆர்டர் மிரளும்.. ரூ.7000 பட்ஜெட்ல 6.6 இன்ச் டைனாமிக் டிஸ்பிளே மாடல்!

இந்த டைனாமிக் பார் பீச்சர் மூலம் பேட்டரி மற்றும் கால் நோட்டிபிகேஷன்களை தெரிந்து கொள்ளலாம். 8 ஜிபி ரேம் (3 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வருகின்றன.

2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் உள்ளது. இந்த பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கோ எடிஷன் (Android 14 Go Edition) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி603 எஸ்ஓசி (Octa-core Unisoc T603 SoC) சிப்செட் வருகிறது. டைப்-சி (Type-C) சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

இந்த பேட்டரி உடன் 8.7 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. 8 எம்பி மெயின் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் வருகிறது.

இதுவொரு 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்இடி கனெக்டிவிட்டி வருகிறது. ப்ளூடூத், வை-பை மற்றும் ஜிபிஎஸ் சப்போர்ட் உள்ளது. இந்த ஐடெல் ஏ50 போனில் லைம் கிரீன் (Lime Green), மிஸ்டி பிளாக் (Misty Black), ஷிம்மர் கோல்டு (Shimmer Gold) மற்றும் சியன் ப்ளூ (Cyan Blue) ஆகிய கலர்கள் இருக்கின்றன.

ஐடெல் ஏ50சி அம்சங்கள் (itel A50C Specifications): இந்த ஐடெல் மாடலில் 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) வாட்டர் டிராப் (Water-drop) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எச்டி (HD) ரெசொலூஷன் கொண்ட எல்சிடி டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவிலும் டைனாமிக் பார் பீச்சர் வருகிறது.

இந்த போனில் 4 ஜிபி ரேம் (2 ஜிபி ரேம் + 2 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 32 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வருகிறது. அதேபோல 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா வருகிறது. இந்த ஐடெல் ஏ50சி மாடலிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கோ எடிஷன் கொண்டிருக்கிறது.

மேலும், ஆக்டா கோர் யுனிசோக் டி603 எஸ்ஓசி சிப்செட் உள்ளது. 5W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி கொண்ட 4000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியுடன் 192 கிராம் எடை, 9.4 மிமீ தடிமன் கொண்டுள்ளது. டவுன் ப்ளூ (Dawn Blue), சபையர் பிளாக் (Sapphire Black), மிஸ்டி அக்வா (Misty Aqua) கலர்கள் உள்ளது.

மற்ற அம்சங்கள் அனைத்தும் முந்தைய மாடலை போலவே இருக்கிறது. இந்த 2 மாடல்களும் ஓரிரு வாரங்களில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கின்றன. வெறும் ரூ.7000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதைவிட மலிவான விலையில் ஆரம்ப மாடல்கள் வரவும் வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
itel A50 With 8GB RAM, 5000mAh Battery Launch Soon Sale Under Rs 7000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X