ரூ.6,399-விலையில் ஐடெல் ஏ48 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

ஐடெல் ஏ48 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது ஐடெல் ஏ48 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஐடெல் ஏ48

ஐடெல் ஏ48

ஐடெல் ஏ48 ஸ்மார்ட்போன் ஆனது 6.1-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் வாட்டர் டிராப் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1560X720 பிக்சல் தீர்மானம், 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விரைவில் இந்தியாவில்- ஆனா ஒப்போ ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ மட்டும்தான் அது இல்ல- தரமான அம்சம், உச்சநிலை கேமரா!விரைவில் இந்தியாவில்- ஆனா ஒப்போ ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ மட்டும்தான் அது இல்ல- தரமான அம்சம், உச்சநிலை கேமரா!

டெல் ஏ48 ஸ்மார்ட்போனில்

இந்த புதிய ஐடெல் ஏ48 ஸ்மார்ட்போனில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்குமிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ48 2ஜிபி ரேம் மற்றும் 32

புதிய ஐடெல் ஏ48 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சொல்லவே இல்ல: இந்தியாவில் உற்பத்தியா? விரைவில் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி ஸ்மார்ட்போன்- எப்போது அறிமுகம்?சொல்லவே இல்ல: இந்தியாவில் உற்பத்தியா? விரைவில் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி ஸ்மார்ட்போன்- எப்போது அறிமுகம்?

ஐடெல் ஏ48 ஸ்மார்

இந்த ஐடெல் ஏ48 ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவும் உள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின்
வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

3000 எம்ஏஎச் பேட்டரி

அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 4ஜி ஆதரவுடன் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஐடெல் ஏ48 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை ரூ.6,399-விலையில் வாங்க முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த மாதம் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஐடெல் எஸ் 17 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று
விரிவாகப் பார்ப்போம்.

ஐஸ்வர்யம் அதிகரிக்க அம்பானி வீட்டில் நடப்பட்ட இரண்டு மரம்: 180 வருட பழமையான அதிசய மரம்., விலை ரூ.84 லட்சம்!ஐஸ்வர்யம் அதிகரிக்க அம்பானி வீட்டில் நடப்பட்ட இரண்டு மரம்: 180 வருட பழமையான அதிசய மரம்., விலை ரூ.84 லட்சம்!

Itel எஸ் 17

Itel எஸ் 17

Itel எஸ் 17 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 கோ பதிப்பில் இயங்குகிறது. இது ஆக்டா-கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு HD+ தீர்மானம் கொண்ட 6.6 இன்ச் IPS டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஐடெல் எஸ் 17 என்பது பட்ஜெட்டை மையமாகக் கொண்ட போன் ஆகும். இது மூன்று வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வேரியண்ட் மாடல்

புதிய Itel S17 ஸ்மார்ட்போன் 1GB ரேம் உடன் 16 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் உடன் வருகிறது. ஐடெல் எஸ் 17 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இதில் AI ஃபேஸ் பியூட்டி 4.0, பொக்கே, ஏஆர் ஸ்டிக்கர்கள் மற்றும் பல அம்சங்கள் உள்ளது. இது 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 27 நாட்கள் காத்திருப்பு நேரம், 7 மணிநேர படப்பிடிப்பு, 30 மணிநேர தடையில்லா அழைப்புகள் மற்றும் 70 மணிநேர பொழுதுபோக்கு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதில் பின்புற கைரேகை சென்சார் உள்ளது மற்றும் ஐடெல் எஸ் 17 ஃபேஸ் அன்லாக்ஸையும் ஆதரிக்கிறது.

வாட் கோர் பிராசஸர் மூல

இந்த புதிய ஸ்மார்ட்போன் 1.3GHz குவாட் கோர் பிராசஸர் மூலம் 1 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பே சொன்னது போல் இது ஸ்மார்ட்போனின் இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய 16 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை ஆதரிக்கிறது. கூடுதல் ஸ்டோரேஜ் பயன்பாட்டிற்காக இந்த ஸ்மார்ட்போன் உடன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Itel A48 with HD+ display Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X