Home
Mobile

ரூ.5,499-விலையில் ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் அறிமகம்.! என்னென்ன அம்சங்கள்?

ஐடெல் நிறுவனம் தனது புதிய ஐடெல் ஏ47 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் வரும் பிப்ரவரி 5-ம் தேதி இந்த ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும்.

ஐடெல் ஏ47 டிஸ்பிளே

ஐடெல் ஏ47 டிஸ்பிளே

ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 5.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்; கொண்டுள்ளது. பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

1.4ஜிகஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்

1.4ஜிகஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 1.4ஜிகஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் வசதி இருப்பதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.மேலும் இதில் ஆண்ட்ராய்டு 9.0 (கோ எடிஷன்) இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

5எம்பி பிரைமரி லென்ஸ்

5எம்பி பிரைமரி லென்ஸ்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 5எம்பி பிரைமரி லென்ஸ் + VGA secondary சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு portrait mode, beauty mode, உள்ளிட்ட வசதிகளுடன் இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

3020 எம்ஏஎச் பேட்டரி

3020 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போனில் 3020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி உள்ளிட்ட பல்வேறுஆதரவுகள் இருப்பதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.

 ஜிபிஎ

டூயல் 4 ஜி வோல்ட்இ, புளூடூத் 4.2, வைஃபை, ஜிபிஎஸ், இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் காஸ்மிக் பர்பில் மற்றும் ஐஸ் லேக் ப்ளூ நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ரூ.5,499-விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியம்.

Best Mobiles in India

English summary
Itel A47 with Dual-Rear Cameras Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X