ரூ.4,999 விலையில் டூயல் ரியர் கேமராவுடன் ஐடெல் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஐடெல் ஏ46 ஸ்மார்ட்போனில் 8எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், கைரேகை சென்சார் என பல வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
இந்தியாவில் ஐடெல் நிறுவனம் புதிய ஐடெல் ஏ46 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மலிவு விலையில் டூயல் ரியர் கேமரா, கைரேகை சென்சார் போன்ற பல்வேறு ஆதரவுகளை
கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும டார்க் வாட்டர், கிரேடியேஷன் டைமண்ட் கிரே, ஃபியெரி ரெட் மற்றும் நியான் வாட்டர் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனம் சார்பில் ஐடெல் ஏ46 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் 1200 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும் 100 நாட்கள் ரீபிளேஸ்மென்ட் வசதியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:
ஐடெல் ஏ46 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி ஐபிஎஸ் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, பின்பு 1280x720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போனில் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் யுனிசாக் எஸ்இ9863 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
ஐடெல் ஏ46 ஸ்மார்ட்போனில் 8எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், கைரேகை சென்சார் என பல வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

பேட்டரி-விலை:
ஐடெல் ஏ46 சாதனத்தில் 2400எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை
மதிப்பு ரூ.4,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications