ரூ.4,399-விலையில் டூயல் கேமராவுடன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி + 0.08எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 2எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த சாதனத்தின் இடம்பெற்றுள்ளது.
ஐடெல் நிறுவனம் இப்போது டூயல் ரியர் கேமரா வசதியுடன் புதிய ஐடெல் ஏ44 ஏர் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் மலிவு விலையில் பல்வேறு புதிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பேஸ்அன்லாக், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் பல்வேறு வசதிகளைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
இந்த ஐடெல் ஏ44 ஏர் ஸ்மார்ட்போன் மாடல் 5.45-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு 480x960 பிக்சல் திர்மானம் மறறும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:
ஐடெல் ஏ44 ஏர் சாதனம் பொதுவாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியுடன் வெளிவந்துள்ளது, பின்பு குவாட்-கோர் 1.4ஜிகாஹெர்ட்ஸ், எஸ்சி9832இ பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி + 0.08எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 2எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த சாதனத்தின் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
ஐடெல் ஏ44 ஏர் சாதனத்தில் 2400எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications