ஐடெல் அறிமுகம் செய்த புதிய 4ஜி போன்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
ஐடெல் நிறுவனம் இந்தியாவில் ஐடெல் ஏ300சி (itel A300C) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது ஒரு 4ஜி போன் ஆகும். ஆனாலும் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த போன் கம்மி பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது. இப்போது இந்த புதிய ஐடெல் போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஐடெல் ஏ300சி அம்சங்கள் (itel A300C Specifications): 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் ஐடெல் ஏ300சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் யுனிசாக் டி7100 (2.2GHz Octa Core UNISOC T7100) சிப்செட் உடன் ஐடெல் ஏ300சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ஆதரவுடன் ஐடெல் ஏ300சி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 கோ எடிஷன் இயங்குதள வசதியுடன் புதிய ஐடெல் போன் வெளியாகி உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) வசதியும் இந்த ஐடெல் ஏ300சி மாடலில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐடெல் நிறுவனம்.
8எம்பி ரியர் கேமரா உடன் ஐடெல் ஏ300சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த புதிய ஐடெல் போனில் உள்ளன.
அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது இந்த ஐடெல் போன். 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack) மற்றும் டிடிஎஸ் சவுண்ட் (DTS sound) ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
6000எம்ஏஎச் பேட்டரி உடன் ஐடெல் ஏ300சி உடன் ஐடெல் ஏ300சி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ், குளோனாஸ், பெய்டோ, யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் புதிய ஐடெல் ஏ300சி போனில் உள்ளது.
ஐடெல் ஏ300சி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை ஆஃப்லைன் கடைகளில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
photo credits: phoneprice


Click it and Unblock the Notifications
