லட்டு மாதிரி தூக்குங்க.. ரூ.8,699-க்கு 6000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 8MP கேமரா.. 2TB மெமரி.. எந்த மாடல்?
இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல், பழைய மாடல்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ஆனால், பட்ஜெட்டில் மட்டுமே ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வரும் ஐடெல் (itel) நிறுவனமானது, எந்த விலை உயர்வையும் செய்யவில்லை. ஏற்கனவே, வெளியான ஸ்மார்ட்போனின் பேசிக் வேரியண்ட்டை இப்போது களமிறக்கி இருக்கிறது.
ஐடெல் ஏ300சி (itel A300C) ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகியது. சொல்லப்போனால். இதுவே பேசிக் வேரியண்ட் கணக்கில்தான் வருகிறது. ஆனால், இப்போது அதைவிட பேசிக்காக 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் களமிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக வந்த 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆக இருந்தது. இப்போது, வெளியாகி இருக்கும் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,699 ஆக இருக்கிறது. ஆகவே, அடிமட்ட பட்ஜெட்டில் ஸ்மார்ட்போனை தேடிக்கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு போதுமான பீச்சர்களுடன் கிடைக்கும் இந்த ஐடெல் ஏ300சி சரியாக இருக்கும்.
இந்த விலையிலும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கும்படி எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கிடைக்கிறது. ஆகவே, டிராப் ரெசிஸ்டன்ஸ், வைப்ரேஷன் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்டவை கொடுக்கும். 100 நாட்களுக்கு ஸ்கிரீன் ரீபிளேஸ்மெண்ட் வாரண்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது, முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஐடெல் ஏ300சி அம்சங்கள் (itel A300C Specifications): ஆண்ட்ராய்டு 16 கோ எடிஷன் (Android 16 Go Edition) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி7100 12என்எம் (Octa Core UNISOC T7100 12nm) சிப்செட்டை இந்த ஐடெல் ஏ300சி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. யுனிசோக் சிப்செட்டில் வழக்கமாக கிடைக்கும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 32 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. டூயல் நானோ சிம் சிலாட் + மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைக்கிறது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் பெரும்பாலும் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமே கிடைக்கும். ஆனால், இந்த ஐடெல் ஏ300சி ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8 எம்பி ரியர் கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்டுள்ளது. 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது. டிடிஎஸ் சவுண்ட் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 4ஜி மாடலாக இருப்பதால், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 801.11 ஏசி (Wi-Fi 802.11 ac) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
