மலிவு விலையில் புதிய ஸமார்ட்போனை அறிமுகம் செய்து கெத்து காட்டிய ஐடெல்.!
ஐடெல் நிறுவனம் புதிய ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறிய டிஸ்பிளே மற்றும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அனைத்து நிறுவனங்களும் பெரிய டிஸ்பிளே கொண்ட போன்களை தான் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன.
ஆனால் இந்த ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. எனவே நல்ல வரவேற்பு கிடைக்கும். பின்பு இந்த போன் தற்போது பங்களாதேஷில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தனித்துவமான டிஸ்பிளே
ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை அனைத்து இடங்களிலும் மிக அருமையாகப் பயன்படுத்த முடியும். பின்பு 850 x 480 பிக்சல் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸமார்ட்போன்.
அருமையான சிப்செட்
ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவாட்-கோர்ட 1.4ஜிகாஹெர்ட்ஸ் Unisoc SC9832E சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐடெல் நிறுவனம்.
மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு
இந்த ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேமரா எப்படி?
இந்த புதிய போனில் கேமராவைத் தவிர அனைத்து அம்சங்களுமே அருமையாக உள்ளது. அதாவது இந்த போன் 2எம்பி ரியர் கேமரா மற்றும் 0.3எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது. ஆனால் இதற்குப்பதிலாக 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி கேமரா இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். பின்பு எல்இடி பிளாஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போன்.
தரமான பேட்டரி
ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 3020எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு மைக்ரோ-யுஎஸ்பி போர்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

கைரேகை ஸ்கேனர் ஆதரவு?
அதேபோல் ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் ஆதரவு இல்லை. அதற்குப் பதிலாக பேஸ் அன்லாக் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் பச்சை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடெல் ஏ24 ப்ரோ விலை?
ஐடெல் ஏ24 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை BTD 5,990 (இந்திய மதிப்பில் ரூ.4,570) ஆக உள்ளது. குறிப்பாக இந்த போன் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல்வேறு அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








