Home
Mobile

மலிவு விலையில் புதிய ஐடெல் போன் அறிமுகம்.. 5000mAh பேட்டரி.. எல்சிடி டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனம் தனது புதிய ஐடெல் ஏ100சி நியூ (Itel A100C New) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஐடெல் ஏ100சி நியூ அம்சங்கள் (Itel A100C New Specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ஐடெல் ஏ100சி நியூ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1612பிக்சல்ஸ், 180Hz டச் சாம்பிளிங் ரேட் (180Hz touch sampling rate), 400 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

மலிவு விலையில் புதிய ஐடெல் போன் அறிமுகம்.. எந்த மாடல்?

தரமான யுனிசாக் டி7100 ஆக்டா-கோர் எஸ்ஒசி (Unisoc T7100 octa-core SoC) சிப்செட் உடன் ஐடெல் ஏ100சி நியூ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த மடியும்.

2ஜிபி ரேம் (4ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64ஜிபி மெமரி ஆதரவு உடன் ஐடெல் ஏ100சி நியூ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

8எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ள ஐடெல் ஏ100சி நியூ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ஐடெல் ஏ100சி நியூ ஸ்மார்ட்போனில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியுடன் இந்த ஐடெல் ஏ100சி நியூ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் DTS ஆடியோ வசதியுடன் கூடிய சிங்கிள் ஸ்பீக்கர் கொண்டுள்ளது இந்த போன். மேலும் IPX4 ரேட்டிங் மற்றும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய ஐடெல் போன்.

5000mAh பேட்டரி உடன் ஐடெல் ஏ100சி நியூ ஸ்மார்ட்போன் வெளியானது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போன் ஆண்ட்ராய்டு 15 கோ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.

புளூடூத், வைஃபை 2.4 ஜிகாஹெர்ட்ஸ், ஜிபிஎஸ், டூயல் சிம் 4ஜி எல்டிஇ, ஐஆர் பிளாஸ்டர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி-சி போர்ட் போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஐடெல் ஏ100சி நியூ போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ஐடெல் ஏ100சி நியூ ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. சில்க் கிரீன், டைட்டானியம் கோல்டு மற்றும் ப்யூர் பிளாக் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். அனைத்து ஆஃப்லைன் கடைகளிலும் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
Itel A100C New With 5000mAh Battery launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X