அடிச்சான் பாரு காப்பி.. ஒன்பிளஸ் போன் லுக்கில் புது ஐடெல் போன்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஐடெல் நிறுவனம் தனது புதிய ஐடெல் ஏ100சி (Itel A100C) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஐடெல் போன் வரவிருக்கும் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடலை போலவே உள்ளது. இப்போது இந்த புதிய ஐடெல் போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஐடெல் ஏ100சி அம்சங்கள் (Itel A100C Specifications): 6.6-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720×1612 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate), 400 நிட்ஸ் பிரைட்னஸ், 90 சதவீதம் ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ (Screen to body ratio) உள்ளிட்ட பல அ அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த யுனிசாக் டி7100 ஆக்டா-கோர் (Unisoc T7100 octa-core) சிப்செட் உடன் ஐடெல் ஏ100சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் ஐடெல் ஓஎஸ் 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் வெளிவந்துள்ளது.
12ஜிபி ரேம் (4ஜிபி ரேம் + 8ஜிபி எக்ஸ்டென்டட் ரேம்) மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐடெல் ஏ100சி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)கொண்டுள்ளது இந்த புதிய ஐடெல் ஏ100சி ஸ்மார்ட்போன். மேலும் DTS-டியூன் செய்யப்பட்ட ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளது. எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் ஃபேஸ் அன்லாக் வசதியும் இந்த போனில் உள்ளது.
8எம்பி ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஐடெல் ஏ100சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது. பிளாக், டைட்டானியம் கோல்ட்,பிளேஸ் ப்ளூ மற்றும் சில்க் கிரீன் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐஆர் ரிமோட் கண்ட்ரோலுக்கான (IR remote control) ஆதரவு, புளூடூத், வைஃபை போன்ற அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளன. அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது ஐடெல் ஏ100சி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போன் மேம்பட்ட கேமிங் அம்சங்களை வழங்கும்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஐடெல் ஏ100சி போன் அறிமுகம் செய்யப்பட்டது. இது 8.5 மணி நேரம் கேமிங் அல்லது 27.7 மணிநேர டால்க் டைம்(27.7 Hours Talktime) அல்லது 32 நாட்கள் வரையிலான ஸ்டேன்ட்பை டைம்-ஐ (32 Days Standby Time) வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடெல் ஏ100சி போன் தற்போது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகும். அப்போது அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications








