மொத்த மார்கெட் வாங்குமே.. ரூ.8999 க்கு 5000mAh பேட்டரி, 10W சார்ஜிங்.. புது itel ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
அடிமட்ட பட்ஜெட்டில் 5000mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, எச்டிபிளஸ் டிஸ்பிளே, டிடிஎஸ் சவுண்ட், டைனாமிக் பார் போன்ற பீச்சர்களுடன் ஐடெல் ஏ100 ப்ரோ (itel A100 Pro Specifications) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. இந்த பட்ஜெட் மாடலின் பீச்சர்கள், விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் அதிக ஸ்மார்ட்போன்களை களமிறங்குவதில் ஐடெல் நிறுவனமும் ஒன்றாகும். மலிவான விலைக்கு கிடைத்தாலும், டிசைன் மற்றும் பீச்சர்களில் ரூ.15,000 விலைக்கு கிடைக்கும் மாடல்களின் பீல் கொடுத்துவிடுகிறது. இதனாலேயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஐடெல் ஏ100 ப்ரோ மாடலும் சேர்ந்துள்ளது.

இந்த பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷனை கொடுத்து மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுத்து இருக்கிறது. இந்த பில்ட் குவாலிட்டியில் கோமட் ஆரஞ்ச் (Comet Orange), கிளவுட் ஒயிட் (Cloud White) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
100 நாட்களுக்கு இலவச ஸ்கிரீன் ரீபிளேஸ்மெண்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. அதாவது, இந்த ஐடெல் ஏ100 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கி 100 நாட்களுக்குள் ஸ்கிரீன் ரீபிளேஸ்மெண்ட் செய்து கொள்ளலாம். டைனாமிக் பார் (Dynamic Bar), டிடிஎஸ் சவுண்ட் டெக்னாலஜி (DTS Sound Technology) உள்ளிட்ட பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களும் கிடைக்கின்றன.
ஐடெல் ஏ100 ப்ரோ அம்சங்கள் (itel A100 Pro Specifications): இந்த பட்ஜெட் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும், ஆக்டா கோர் யுனிசோக் டி7100 12என்எம் (Octa Core UNISOC T7100 12nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் (Android 15 Go Edition) கிடைக்கிறது.
6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் இந்த ஐடெல் ஏ100 ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. டைனாமிக் பார் (Dynamic bar) பீச்சருடன் நோட்டிபிகேஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரியை இந்த ஐடெல் ஏ100 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. கூடுதலாக 5 ஜிபிக்கு விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்படுகிறது. மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டிடிஎஸ் சவுண்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மட்டுமல்லாமல், ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) கொண்ட மாடலாகவும் இந்த ஐடெல் ஏ100 ப்ரோ ஸ்மார்ட்போன் இருக்கிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. டைப்-சி சார்ஜிங் கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கிடைக்கிறது.
மேலும், வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 5 (Bluetooth 5) கிடைக்கிறது. ரூ.8,999 விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக கிடைக்கிறது. பிளிப்கார்ட், அமேசான் தளங்களில் விரைவில் எதிர்பார்க்கலாம். 100 நாட்களுக்கு ஸ்கிரீன் ரீபிளேஸ்மெண்ட் சலுகையையும் இந்த ஐடெல் ஏ100 ப்ரோ கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications