விஸ்வரூப விற்பனை.. ரூ.10,999 க்கு 1 போன், 1 நெக்பேண்ட்.. 5000mAh பேட்டரி.. 10W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இதில் ஐடெல் நிறுவனமானது, ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல், நெக்பேண்ட் மாடல்களையும் களமிறக்கி வருகிறது. இப்போது, 2 மாடல்களையும் சேர்ந்து, ஒரே விலையில் கொடுக்கிறது. இந்த லிமிடெட் பீரியட் சலுகையை இப்போது, தெரிந்து கொள்ளலாம்.
ஐடெல் ஏ100 ப்ரோ (itel A100 Pro) ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் வேரியண்ட் அடிமட்ட பட்ஜெட்டில் வெளியாகி விற்பனையில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது, 4 ஜிபி ரேம் வேரியண்ட்டானது, ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய வேரியண்ட்டை களமிறக்கி இருப்பதால், நெக்பேண்ட்டை இலவமாக ஐடெல் நிறுவனம் கொடுக்கிறது.

அதாவது, இந்த ஐடெல் ஏ100 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் வேரியண்ட்டில் விலை ரூ.10,999ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலைக்கு ரீடெயில் ஸ்டோர்களில் வாங்கும்போது, ரூ.1,499 மதிப்புள்ள நெக்பேண்ட் முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இது லிமிடெட் பீரியட் ஆஃபராக இருக்கிறது. ஆகவே, எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம்.
அதேபோல இப்போதைக்கு ரீடெயில் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கிறது. ஈ-காமர்ஸ் தளங்களில் கிடைப்பது குறித்த விவரங்களை ஐடெல் நிறுவனம் உறுதி செய்யவில்லை. ரூ.10,999 விலைக்கு கிடைக்கும் இந்த ஐடெல் ஏ100 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், டிசைன் மற்றும் கலர் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐடெல் ஏ100 ப்ரோ அம்சங்கள் (itel A100 Pro Specifications): டைனாமிக் பார் (Dynamic Bar) சப்போர்ட் கொண்ட 6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
8 எம்பி மெயின் கேமராவை இந்த ஐடெல் ஏ100 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி7100 12என்எம் (Octa Core UNISOC T7100 12nm) சிப்செட் கிடைக்கிறது.
பட்ஜெட் மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் (Android 15 Go Edition) கொடுக்கப்பட்டு உள்ளது. டிடிஎஸ் சவுண்ட் டெக்னாலஜி (DTS Sound Technology) கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது. எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டு உள்ளது. டுயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 5 (Bluetooth 5) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டிகளை இந்த ஐடெல் ஏ100 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
காமட் ஆரஞ்ச் (Comet Orange), கிளவுட் ஒயிட் (Cloud White) மற்றும் பிளாக் (Black) ஆகிய மூன்று கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த ஐடெல் ஏ100 ப்ரோ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் வேரியண்ட்டானது, ரூ.8,999 விலைக்கு வந்தது. அதேபோல 100 நாட்களுக்கு ஸ்கிரீன் ரீபிளேஸ்மெண்ட் சலுகையும் இந்த ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications