Home
Mobile

OnePlus-க்கு வந்த சோதனை.. அட்டை காப்பி Itel.. ரூ.6,799 பட்ஜெட்ல புதிய போன் அறிமுகம். எந்த மாடல்?

ஐடெல் நிறுவனம் இந்தியாவில் புதிய ஐடெல் ஏ100 (Itel A100) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஐடெல் போன் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இப்போது இந்த புதிய ஐடெல் ஏ100 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஐடெல் ஏ100 அம்சங்கள் (Itel A100 specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ஐடெல் ஏ100 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 720 x 1612 பிக்சல்ஸ், 180Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

OnePlus-க்கு வந்த சோதனை.. அட்டை காப்பி Itel.. புதிய போன் அறிமுகம்.

8எம்பி ரியர் கேமரா உடன் ஐடெல் ஏ100 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

தரமான யுனிசாக் டி7100 ஆக்டா-கோர் எஸ்ஒசி (Unisoc T7100 octa-core SoC) சிப்செட் உடன் இந்த ஐடெல் ஏ100 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 கோ (Android 15 Go) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.

3ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஐடெல் ஏ100 ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. மேலும் இந்த போனுக்கு 8ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் ஐடெல் ஏ100 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 10W சாரஜிங் ஆதரவும் உள்ளது.

IPX4 ரேட்டிங் பெற்றுள்ளது இந்த ஐடெல் ஏ100 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் கூட இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

OnePlus-க்கு வந்த சோதனை.. அட்டை காப்பி Itel.. புதிய போன் அறிமுகம்.

டூயல் சிம் 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஐடெல் ஏ100 ஸ்மார்ட்போனில் உள்ளன. டிடிஎஸ் ஆடியோ ஆதரவு கொண்ட சிங்கிள் ஸ்பீக்கர் உடன் வெளிவந்துள்ளது இந்த புதிய போன்.

3ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ஐடெல் ஏ100 மாடலின் விலை ரூ.6,799-ஆக உள்ளது. மேலும் இதன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.7,499-ஆக உள்ளது. சில்க் கிரீன், ப்யூர் பிளாக் மற்றும் டைட்டானியம் கோல்ட் கலர்களில் இந்த போனை வாங்க முடியும். இந்தியா முழுவதும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஐடெல் ஏ100 போன் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Itel A100 launched in India with OnePlus 15 like design: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X