விஸ்வரூப மாடல்.. ரூ.6,499 போதும்.. 6.6-இன்ச் டிஸ்பிளே.. 4000mAh பேட்டரி.. தொக்கா தூக்கலாம்.. எந்த போன்?
ஐடெல் நிறுவனம் இந்தியாவில் புதிய ஐடெல் ஏ05எஸ் (itel A05s) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது பெரிய டிஸ்பிளே, கைரேகை ஸ்கேனர், தரமான பிராசஸர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1612 x 720 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz refresh rate), 120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்(120Hz touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புத்தம் புதிய ஐடெல் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த 1.6ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் எஸ்சி9863ஏ ஆக்டோ-கோர் (Unisoc SC9863A octa-core processor) பிராசஸர் வசதியுடன் இந்த ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன்(Android 13 Go edition) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
இந்த ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card slot) ஆதரவு இந்த போனில் உள்ளது.
அதேபோல் ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 5எம்பி கேமரா உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போன்.
4000 எமஏஎச் பேட்டரியுடன் இந்த ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
குறிப்பாக இந்த புதிய ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது. பின்பு டூயல் சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், ஜிபிஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி அம்சங்களுடன் இந்த புத்தம் புதிய ஐடெல் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போன் குறைந்த எடையில் வெளிவந்துள்ளது.

நெபுலா பிளாக் (Nebula Black), மெடோ கிரீன் (Meadow Green), கிரிஸ்டல் ப்ளூ (Crystal Blue) மற்றும் க்ளோரியஸ் ஆரஞ்சு (Glorious Orange)நிறங்களில் இந்த ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும். குறிப்பாக ஐடெல் இந்தியாவின் இணையதளத்தில் ( itel India's website) இந்த புதிய போனை வாங்க முடியும். குறிப்பாக ஐடெல் ஏ05எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,499-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஐடெல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் கம்மி விலையில் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சியோமி, ரியல்மி, விவோ நிறுவனங்களை விட இந்த ஐடெல் நிறுவனம் கம்மி விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யஅதிக ஆர்வம் காட்டுகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








