ஜூன் 12 வரை பொறுங்க; அவசரப்பட்டு ஒன்ப்ளஸ் 6 வாங்கிட வேண்டாம்.!

அதற்கு ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு தான் வருகிற ஜூன் 12 தேதி அறிமுகத்தை சந்திக்கவுள்ள சியோமி ரெட்மீ 6 தொடர் ஸ்மார்ட்போன்கள்.

|

சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் தொடங்கி ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்கள் வரை அறிமுகம் செய்து, போதுமான அளவு பிரபலத்தன்மையை அடைந்த விட்ட காரணத்தினால் (குறிப்பாக இந்தியாவில்), சியோமி நிறுவனம் இந்த 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, ஒரு வேறுபட்ட வணிக பாணியை கையாண்டு வருகிறது.

அதற்கு ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு தான் வருகிற ஜூன் 12 தேதி அறிமுகத்தை சந்திக்கவுள்ள சியோமி ரெட்மீ 6 தொடர் ஸ்மார்ட்போன்கள். நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மற்றும் சூப்பர் செல்லிங் ஸ்மார்ட்போன்களான ரெட்மீ வரிசையின் கீழ் வெளியாகும் ரெட்மீ 6 தொடர் ஆனது ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமான ஆறு மாதங்கள் கழித்து வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்ச் வடிவமைப்பை கொண்டுருக்கும்.!

நாட்ச் வடிவமைப்பை கொண்டுருக்கும்.!

சில தினங்களுக்கு முன்னர் சியோமி நிறுவனம், அதன் ரெட்மீ 6 தொடர் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு தொடர்பாக ஒரு உத்தியோகபூர்வ டீஸரை வெளியிட்டது. அந்த டீஸரின் படி, ஜூன் 12 ஆம் தேதியன்று ரெட்மீ 6 மற்றும் ரெட்மி 6 பிளஸ் (அல்லது ரெட்மீ 6 ப்ரோ) என்கிற இரண்டு தயாரிப்புகள் வெளியாகும். ஒரு சில நாட்களுக்கு முன்னர் TENAA-வில் (சான்றிதழ் தளம்) காணப்பட்டதைப் போலவே இந்த ஸ்மார்ட்போன்கள் நாட்ச் வடிவமைப்பை (ஒன்ப்ளஸ் 6-ன் மேல்பக்கத்தில் இருப்பதை போன்று) கொண்டு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மே 31-ல் தள்ளிப்போனது; அதனால்.!

மே 31-ல் தள்ளிப்போனது; அதனால்.!

கூடுதல் சுவாரசியம் என்னவெனில், ஜூன் 12 அன்று ரெட்மீ 6ஏ ஸ்மார்ட்போனும் வெளியாகலாம். நிறுவனத்தின் நாட்ச் வடிவமைப்பிலான இந்த ஸ்மார்ட்போன்கள் கடந்த மே 31 ஆம் தேதி நடந்த சியோமியின் பிரதான விழா ஒன்றில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அபப்டி நடக்கவில்லை. ஆக அவைகள் அனைத்தும் வருகிற ஜூன் 12 அன்று அறிமுகப்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது.

5.84 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே.!

5.84 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே.!

கடந்த மே மாதம் 28-ஆம் தேதியன்று, மாடல் எண் M1805D1SE என்கிற பெயரின் கீழ் காணப்பட்ட சியோமி ரெட்மீ 6 ஆனது, சீன சான்றிதழ் வலைத்தளமான TENAA சான்றிதழைப் பெற்றது. அதில் ஸ்மார்ட்போனின் முழுமையான அம்சங்களும் பட்டியலிடப்பட்டிருந்து. அதன்படி, ரெட்மீ 6 ஆனது 19: 9 என்கிற அளவிலான திரை விகிதம், 2280 x 1080 பிக்ஸல் தீர்மானம், 5.84 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே ஆகியவைகளை கொண்டிருக்கும்.

ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் கொண்டு இயங்கலாம்.!

ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் கொண்டு இயங்கலாம்.!

நாட்ச் வடிவமைப்பை கொண்டு வெளியாகும் முதல் ரெட்மீ ஸ்மார்ட்போன் ஆன ரெட்மீ 6 ஆனது, 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ப்ராசஸருடன் கூடிய ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் கொண்டு இயங்கலாம். நிறுவனத்தின் பழைய பாணியை பின்பற்றும்படி, ஏற்கனவே உள்ள பல சியோமி ஸ்மார்ட்போன்களை போன்றே இதுவும் பல்வேறு ரேம் / சேமிப்பக விருப்பங்களில் வெளிவரும்.

இரட்டை கேமராக்களை கொண்டிருக்கும்.!

இரட்டை கேமராக்களை கொண்டிருக்கும்.!

நிச்சயமாக ரெட்மீ 6 ஆனது, அதன் பின்புறத்தில் இரட்டை கேமராக்களை கொண்டிருக்கும். அது 5எம்பி + 12 எம்பி கேமராவாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஒரு 3900mAh பேட்டரி இடம்பெற வேண்டும். மறுகையில் வெளியாகும் ரெட்மீ 6-ன் பெரிய மாறுபாடானது, ரெட்மீ 6 பிளஸ் அல்லது ரெட்மீ 6 ப்ரோ என்கிற பெயரின் கீழ் வழியாகும்.

கைரேகை ஸ்கேனர் இல்லாமல் வெளியாகும்.?

கைரேகை ஸ்கேனர் இல்லாமல் வெளியாகும்.?

வெளியான தகவலின் படி கைரேகை ஸ்கேனர் இல்லாமல் வெளியாகும் மற்றொரு ரெட்மீ ஸ்மார்ட்போனாக ரெட்மீ 6 ப்ளஸ் அல்லது ரெட்மீ 6 ப்ரோ இருக்கும். அதற்கு வாய்ப்பில்லை, மூன்றாவது ஸ்மார்ட்போனாக வெளியாகும் சியோமி ரெட்மீ 6ஏ-வில் வேண்டுமானால் கைரேகை சென்சார் இடம்பெறாமல் போகலாம் என்று வல்லுநர்கள் மாற்றுக்கருத்து தெரிவிக்கின்றனர்.

சர்ப்ரைஸ் ஆக ரெட்மீ 6ஏ வெளியாகலாம்.!

சர்ப்ரைஸ் ஆக ரெட்மீ 6ஏ வெளியாகலாம்.!

ஆகமொத்தம், ஜூன் 12 ஆம் தேதியன்று, சியோமி ரெட்மீ 6, சியோமி ரெட்மீ 6 ப்ளஸ் அல்லது ரெட்மீ 6 ப்ரோ மற்றும் நுழைவு நிலை ஸ்மார்ட்போன் ஆன ரெட்மீ 6ஏ என மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்கள் வெளியாவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. ஏனெனில் மூன்று ஸ்மார்ட்போன்களுமே TENAA சான்றிதழ்களை பெற்று விட்டது.

ரெட்மீ 5 ஸ்மார்ட்போன்களை விட அட்டகாசமான மேம்பாடுகளை பெறும்.!

ரெட்மீ 5 ஸ்மார்ட்போன்களை விட அட்டகாசமான மேம்பாடுகளை பெறும்.!

ரெட்மீ 6 ப்ளஸ் அல்லது 6 ப்ரோவின் அம்சங்களை பொறுத்தவரை, இரட்டை பின்புற கேமராக்கள், மேம்படுத்தப்பட்ட செயலி எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அறிவிக்கப்பட உள்ள க்வால்காம் நிறுவனத்தின் 400 தொடர் சிப்செட் இடம்பெறலாம். ஆகமொத்தம் அம்சங்களை பொறுத்தவரை, சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போன்களை விட அட்டகாசமான மேம்பாடுகளை ரெட்மீ 6 தொடர் ஸ்மார்ட்போன்கள் கொண்டிருக்கும்.

இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்.?

இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்.?

அறிமுகமாகும் ரெட்மீ 6 வரிசையானது கூடிய விரைவில் இந்தியாவிலும் வெளியாகுவதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. ஏனெனில் கடந்த மார்ச் மாதத்தில் ரெட்மீ 5, இந்திய சந்தையை எட்டியது. இந்நிலைப்பாட்டில் உடனடியாக ரெட்மீ 6 வரிசையின் கீழ் வெளியாகும் ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

Best Mobiles in India

English summary
It’s Official: Xiaomi Redmi 6 and Redmi 6A to Launch on June 12. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X