வேற லெவல் அம்சங்களுடன் சியோமியின் கனவு ஸ்மார்ட்போன்.!

|

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி நிறுவனமானது, அதன் மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் அடுத்த அப்டேட் கருவியை தொடங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் வெளியீடு மிக அருகில் இருப்பதை நிரூபிக்கும் வண்ணம் ஒரு லீக்ஸ் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அது கூறப்படும் மி மிக்ஸ் 2எஸ் ஆக இருந்தால் யாரும் எதிர்பாராத ஒரு அம்சம் விரைவில் நமது கைகளில் தவழும். ஏனெனில் வெளியான லீக்ஸ் புகைப்படத்தில் காட்சிப்படும் ஸ்மார்ட்போன் ஆனது டிஸ்பிளேவிற்கு அடியிலான கைரேகை ஸ்கேனர் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

ஸ்கேனர்

ஸ்கேனர்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விவோ எக்ஸ்20 ப்ளஸ் யூடி ஸ்மார்ட்போனில் இவ்வகை ஸ்கேனர் தொழில்நுட்பம் அறிவிக்கப்பட்டதும், அதனை தொடர்ந்தே மி மிக்ஸ் 2எஸ் கருவியில் இது இடம்பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முழு பெஸல்லெஸ் டிஸ்பிளே

முழு பெஸல்லெஸ் டிஸ்பிளே

தவிர வெளியான புகைப்படத்தின்கீழ், மி மிக்ஸ்2 எஸ் ஆனது அதன் மூலைகளில் வட்டமான வடிவமைப்பை பெற்றிருக்கும். அதன் விளைவாக ஒரு முழு பெஸல்லெஸ் டிஸ்பிளே உறுதி செய்யப்படும் மற்றும் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதமும் அதிகரிக்கும்.

முன்னணி கேமரா

முன்னணி கேமரா

இருப்பினும், வெளியான மிக் மிக்ஸ் 2எஸ் லீக்ஸ் புகைப்படத்தில் ஐபோன் எக்ஸ்-ல் இருப்பது போன்றே முன்னணி கேமராவிற்கான பிரத்யேக வடிவமைப்பு ஏதும் இல்லை. ஐபோன் எக்ஸ் போன்றே வடிவமைப்பை கொண்டிருக்கும் முன்னர் வெளியான வதந்திகளை இது தகர்த்துள்ளது.

4400எம்ஏஎச் பேட்டரி

4400எம்ஏஎச் பேட்டரி

அம்சங்களை பொறுத்தமட்டில், மி மிக்ஸ் 2எஸ் ஆனது 18: 9 விகிதத்துடன் 6.01 அங்குல முழு எச்டி+ (1080 x 2160 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, 8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு, 16எம்பி முதன்மை கேமரா மற்றும் 4400எம்ஏஎச் பேட்டரி ஆகியவை கொண்டிருக்கும்.

க்ரோமா ஃப்ளாஷ்

க்ரோமா ஃப்ளாஷ்

மியூஜ 9.8.2.1 ஓஎஸ் கொண்டு இயங்கலாம். கேமராத்துறையையோ பொறுத்தமட்டில் இதன் கேமராக்கள் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் சிலவற்றை கொண்டிருக்கும். மற்றும் சோனியின் ஐஎம்எக்ஸ்363 சென்சார் உடன் "க்ரோமா ஃப்ளாஷ்", "ஆட்டோமேடின் எச்டிஆர்", மற்றும் "ஆப்ரேட்டிங் டிராக்கிங்" போன்ற சிறப்பம்சங்களுடன் வெளியாகும்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
அன்டுடு மதிப்பெண்

அன்டுடு மதிப்பெண்

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் சுவரொட்டி ஒன்றானது மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனின் அன்டுடு மதிப்பெண்ணை (273,741) வெளியிட்டதும், அது இன்றுவரை எந்தவொரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனும் பெறாத மதிப்பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Is this the Xiaomi Mi Mix 2S With Under Display Fingerprint Scanner? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X