Home
Mobile

பிரிச்சி விட்டாப்ல.. ரூ.20,000 பட்ஜெட்ல 8000mAh பேட்டரி.. 144Hz டிஸ்பிளே.. 14GB ரேம்.. முரட்டு கேமிங் மாடல்!

இந்திய மார்கெட்டில் ரூ.20,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் பல்வேறு பிராண்ட்களின் கேமிங் மாடல்கள் கிடைக்கின்றன. இதில் லேட்டஸ்ட் மாடலாக ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி (Realme Narzo 100X 5G) ஸ்மார்ட்போன் களமிறங்கி இருக்கிறது. பெரிய பேட்டரி, அதிக ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டைனாமிக் ரேம் கொடுக்கிறது. இதுபோக வேப்பர் கூலிங் சேம்பர், ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட பீச்சர்களும் கிடைக்கின்றன. இந்த செக்மெண்ட்டில் இது பெஸ்ட் ஆப்ஷனாக இருக்கிறதா?

கேமிங் பிரியர்களுக்கான ஸ்மார்ட்போன் என்றாலே முதலில் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் பக்கமே பார்க்க வேண்டி இருக்கிறது. இதில் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் எந்த குறையும் வைக்கவில்லை. 8000mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. 33 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ள முடியும். பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) கிடைக்கிறது.

பிரிச்சி விட்டாப்ல.. ரூ.20,000 பட்ஜெட்ல 8000mAh பேட்டரி.. மாடல்?

இந்த பைபாஸ் சார்ஜிங் வழியாக மதர் போர்டு மற்றும் பேட்டரிக்கு ஒரே நேரத்தில் பவர் பிரித்து அனுப்பப்படும். இது பேட்டரி ஹீட் கன்ட்ரோல் மற்றும் தெர்மல் புரொடெக்சன் கொடுக்கும். ஆகவே, சார்ஜிங் செய்து கொண்டிருக்கும்போது கேமிங் விளையாடும் பிரியர்களின் பாதுகாப்புக்காக இந்த டெக்னாலஜி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோக 13.5W ரிவர்ஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக கேமிங் பிரியர்கள் ஹெட்போன் அல்லது இயர்பட்ஸ் இல்லாமல் கேமிங் விளையாடுவது குறைவுதான். ஆகவே, இவற்றை சார்ஜ் செய்ய ஸ்மார்ட்போனையே பயன்படுத்தி கொள்ளும்போது, இது கேமிங் மேலும் சுலபமாக மாறுகிறது. ஆகவே, இதையும் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செய்துள்ளது. மேலும், 5300 எம்எம்² வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் (Vapor Chamber Cooling System) வருகிறது.

பிரிச்சி விட்டாப்ல.. ரூ.20,000 பட்ஜெட்ல 8000mAh பேட்டரி.. மாடல்?

ஸ்மார்ட்போனில் ஏற்படும் ஹீட்டை இன்-பில்ட்டாக குறைக்க இந்த சேம்பர் கிடைக்கிறது. இது கேமிங் பிரியர்களுக்கு முக்கியமான பீச்சராக இருக்கிறது. இதையும் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இதுபோக பேட்டரிக்கு பிரத்யேகமாக ஏஐ நைட் சார்ஜிங் மோட், ஏஐ கோல்டு மோட் மற்றும் சார்ஜிங் பூஸ்ட் போன்ற பீச்சர்களும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, பேட்டரியில் கேமிங் பிரியர்களை தட்டித் தூக்கி இருக்கிறது. பேட்டரிக்கு அடுத்து டிஸ்பிளேவே கேமிங் பிரியர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. இதிலும் பட்ஜெட்டில் கொடுக்க முடிகிற பீச்சர்கள் பேக் செய்யப்பட்டுள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 60FPS கேமிங் ரேட் கிடைக்கிறது. 14 ஜிபிக்கான டைனாமிக் ரேம் கிடைப்பதால், லேக் ப்ரீ அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

அதேபோல பர்ஃபாமென்ஸ் பக்கம் எந்த குறையும் சொல்ல முடியாதபடி (இந்த பட்ஜெட்டில்) ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. லேட்டஸ்ட் யுஐ அனுபவம் கொடுக்க ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் பேஸ்டு ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, இந்த பட்ஜெட்டில் பெஸ்ட் ஆப்ஷனாக எடுத்து கொள்ளலாம்.

மேலும், MIL-STD 810H மிலிட்டரி கிரேடு புரொடெக்சனுடன் டிராப் ரெசிஸ்டன்ஸ், ஹாட் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்டவற்றை கொடுக்கிறது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஏஐ பல்ஸ் லைட் கொடுத்துள்ளது. இதுவும் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பீல் கொடுக்கிறது.

அமேசான தளத்தில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,999 ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. இதில், லேக்-ப்ரீ கேமிங் அனுபவத்தை பெறுவதற்கு மினிமம் 6 ஜிபி ரேம் கொண்ட மாடலை வாங்குவது நல்லது. இதிலும் 14 ஜிபி வரையில் டைனாமிக் ரேம் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Is the Realme Narzo 100X 5G a best option for gaming enthusiasts in Rs 20000 budget segment?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X