சீறிப்பாயும் சிறப்பம்சங்கள் கொண்ட எச்டிசி போல்ட்.!

Written By:

பல்வேறு எதிர்பார்ப்புகளைக் கடந்து அமெரிக்கச் சந்தையில் எச்டிசி நிறுவனத்தின் புதிய போல்ட் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

இந்திய மதிப்பில் ரூ.40,500 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் எச்டிசி போல்ட் வடிவமைப்பு எச்டிசி 10 போன்று இருக்கின்றது என்றாலும் சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளன.

எச்டிசி போல்ட் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போமா.??

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வேகம்

வேகம்

செல்லுலார் வேகத்தைப் பொருத்த வரை உலகின் அதிவேக கருவி எச்டிசி போல்ட் தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண எல்டிஇ கனெக்ஷனில் சுமார் 5 முதல் 10 மடங்கு அதிக வேகம் கொண்டிருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போன் நொடிக்கு 250 எம்பி என்ற வேகம் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 810

ஸ்னாப்டிராகன் 810

டெக் சந்தையில் பெரும்பாலான ஃபிளாக்ஷிப் கருவிகளுக்கு ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் வழங்கப்படுகிறது. ஆச்சரியமளிக்கும் வகையில் எச்டிசி போல்ட் ஸ்னாப்டிராகன் 810 சிப்செட் கொண்டுள்ளது. இத்துடன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்படுகின்றது.

மேலும் Cat 9 LTE, யுஎஸ்பி டைப்-சி மற்றும் ப்ளூடூத் 4.1 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

எச்டிசி போல்ட் கருவியில் 5.5 இன்ச் QHD டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. எச்டிசி நிறுவன ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் எச்டிசி போல்ட் ஆகும்.

ஹெட்போன் ஜாக்

ஹெட்போன் ஜாக்

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளின் வெளியீட்டிற்குப் பின் ஹெட்போன் ஜாக் நீக்கும் வழக்கம் துவங்கி இருக்கின்றது. எச்டிசி போல்ட் கருவியில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படவில்லை.

வாட்டர் ரெசிஸ்டண்ட்

வாட்டர் ரெசிஸ்டண்ட்

எச்டிசி போல்ட் கருவியானது IP57 சான்று கொண்டிருக்கிறது. இதனால் கருவியைத் தண்ணீர், மற்றும் தூசு மூலம் பாதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Is HTC Bolt a Sprint exclusive smartphone
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்