இரயில் முன்பதிவு எஸ்.எம்.எஸில் வந்தாச்சு!!

By Keerthi
|

எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்தி மூலம், ரயில் பயண முன்பதிவு செய்யும் சேவையை ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே தொடங்கி வைத்தார்.

வெளியூர்களில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும் என்றும், ரயில்களில் பயணம் செய்வதற்காக புக்கிங் கவுன்டர்களுக்கு சென்று நேரத்தை வீணாக்குவதை இதன் மூலம் தவிர்க்க முடியும் என்றும், ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.

அரசு வளர்ச்சி அடைந்து வரும் செல்போன் சந்தையை கருத்தில் கொண்டு, செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது அமலுக்கு வந்து விட்ட.

நாட்டில் 80 சதவிதம் பேரிடம் மொபைல் போன்கள் உள்ளதால், இந்த சேவையை அவர்கள் பயன்படுத்த முடியும் என்றும் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
இந்த சேவையை பயன்படுத்த, ஒருவர் தனது மொபைல் எண்ணையும், வங்கி அளிக்கும் விவரத்தையும் ஐ.ஆர்.சி.டி.சி., வசம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Click Here For New Smartphones Gallery

இரயில் முன்பதிவு எஸ்.எம்.எஸில் வந்தாச்சு!!

Click Here For New Tablets Gallery

இதன்பின், தாங்கள் பயணம் செய்ய உள்ள ரயிலின் எண், செல்லும் இடம், தேதி, வகுப்பு மற்றும் பயணிகளின் விவரங்களை குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும்.

முன்பதிவு செய்யப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ் கிடைத்தவுடன், அதை காண்பித்து பயணம் செய்யலாம். இதற்காக, ஒரு எஸ்.எம்.எஸ்.சுக்கு 3 ரூபாயும், டிக்கெட் கட்டணம் ஐயாயிரம் ரூபாய் வரை இருந்தால், நுழைவுக் கட்டணமாக ஐந்து ரூபாயும், அதற்கு மேல் இருந்தால் பத்து ரூபாயும் வசூலிக்கப்படும்.

டிக்கெட் கட்டணத்தை கழித்து கொள்வதற்காக, வங்கிகள், சம்பந்தப்பட்ட பயணிக்கு ‘மொபைல் மணி ஐடென்டிபயர்' மற்றும் ‘பாஸ்வேர்டு' வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக, 139 மற்றும் 56776714 என்ற பிரத்யேக எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X