ரூ .13,000 விலைக் குறைப்பைப் பெற்ற iQOO3 ஸ்மார்ட்போன்.. புது விலை இதுதான்..

|

iQOO3 சமீபத்தில் ரூ .13,000 விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது, மேலும் இது பிளிப்கார்ட்டின் அதிகாரப்பூர்வ தயாரிப்பு பக்கத்தில் காணப்படுகிறது. இந்த சாதனம் 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி கொண்ட சாதனத்தின் அடிப்படை வேரியண்ட் ரூ .37,990 விலையிலும், 8 ஜிபி + 256 ஜிபி கொண்ட சற்றே உயர்ந்த வேரியண்ட் ரூ. 40,990 விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரூ .13,000 விலைக் குறைப்பைப் பெற்ற iQOO3 ஸ்மார்ட்போன்.. புது விலை என்ன

ஆனால் பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்படவுள்ள இரு வகை வேரியண்ட் மாடல்களும் ரூ. 13,000 வரை விலை குறைப்பைக் பெற்றுள்ளது. அதன்படி தற்பொழுது, இதன் 8 ஜிபி + 128 ஜிபி கொண்ட அடிப்படை மாடல் இப்போது வெறும் ரூ. 24,990விலைக்குக் கிடைக்கிறது. அதேபோல், இதன் 8 ஜிபி + 256 ஜிபி மாறுபாடு ரூ. 27,990 விலையில் கிடைக்கிறது.

iQOO3 ஸ்மார்ட்போன் குவாண்டம் சில்வர் மற்றும் டொர்னாடோ பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. சாதனத்தின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் நிச்சயமாக மிகச் சிறந்தவை மற்றும் பிற இடைப்பட்ட சாதனங்களுக்குக் கடுமையான போட்டியைக் கொடுக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் திகழ்கிறது. இது வட்டி இல்லா மாத தவணை திட்டத்திலும் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

iQOO3 விவரக்குறிப்புகள்

 • 6.44 இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்பிளே
 • குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்
 • 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
 • 12 ஜிபி ரேம் மாறுபாடும் இருக்கிறது
 • குவாட்-கேமரா அமைப்பு
 • 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
 • 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் சென்சார்
 • 13 மெகா பிக்சல் டெலிபோட்டோ சென்சார்
 • 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார்
 • 16 மெகா பிக்சல் செல்பி கேமரா
 • 5 ஜி
 • வைஃபை
 • புளூடூத்
 • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
 • 55W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
 • 4,440mAh பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
iQOO3 Gets Price Cut of Rs 13,000 In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X