சிட்டாக பறக்கும் ஆர்டர்.. 50MP கேமரா, 6000mAh பேட்டரி.. புதிய ஐக்யூ 5ஜி போன் அறிமுகம்.. என்ன மாடல்? என்ன விலை?
ஐக்யூ நிறுவனம் இன்று ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 4கே வீடியோ ரெக்கார்டிங், 6000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி அம்சங்கள்: 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இது வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் உடன் இந்த புதிய ஐக்யூ போன் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் ன்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். அதுவும் 8ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் மாடலுக்கு 4கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)ஆதரவைக் கொண்டுள்ளது ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி ஃப்யூஷன் ஸ்மார்ட்போன். மேலும் 3.5மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் இதில் IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) வருகிறது.
6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த போனின் எடை 199 கிராம் ஆகும்.

5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.1 ( Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. ஸ்டோர்ம் கிரே (Storm Grey)மற்றும் Tornado கிரீன் (Tornado Green) நிறங்களில் இந்த புதிய போனை வாங்க முடியும்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.14,499 விலையிலும், 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.15,999 விலையிலும் வாங்க முடியும். ஐக்யூ இந்திய ஸ்டோர் மற்றும் அமேசான் தளங்களில் வரும் மே 21-ம் தேதி இந்த போனை வாங்க முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








