மே.16ஆம் தேதி காலி.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
50 எம்பி கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 6 ஜென் சிப்செட் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் கம்மி பட்ஜெட்டில் ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G) போன் வெளியாக இருக்கிறது.
இந்த போன் மே 16ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாகிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆகவே, அந்த போனின் பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. சிப்செட், பேட்டரி, ரேம் மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி மார்கெட்டை மிரளவிட்டுள்ளது.

ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z9x 5G Specifications): இந்த ஐக்யூவில் 2 வருட அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) கொண்டிருக்கிறது. மிட்-ரேஞ்ச் போனிகளில் வரும் ஃபாஸ்டஸ்ட் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் வருகிறது.
சிங்கிள் சார்ஜில் 2 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும் 6000mAh பேட்டரி வருகிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD) சப்போர்ட் வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் டிஸ்பிளே வருகிறது.
இந்த டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் 3.5 எம்எம் இயர்போன் போர்ட் (Earphone Port) வருகிறது. இந்த பட்ஜெட்டில் முதல் முறையாக IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. ஏஐ கேமரா சப்போர்ட் கொண்டிருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. மேற்கூறிய அம்சங்கள் மட்டுமே அமேசான் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. மற்ற அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த போனின் சீன வேரியண்ட் ஏற்கனவே வெளியாகிவிட்டது.
ஆகவே, அந்த போனுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையே இந்திய வேரியண்ட்டுக்கும் இருக்க வாய்ப்புள்ளது. அதோடு மற்ற அம்சங்களும் அதை போலவே இருக்கலாம். ஆகவே, அவற்றை இப்போது பார்ப்போம். இந்த போனில் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்டிருக்கிறது.
மெயின் கேமராவுடன் 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. ஆட்டோபோகஸ் (Auto Focus) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டுள்ளது. இந்த ஐக்யூ மாடலில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
கிரீன் மற்றும் பிளாக் கலர்களில் விற்பனைக்கு வருகிறது. சீனாவில், இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.13,499ஆக இருக்கிறது. ஆகவே, ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் இந்தியாவில் வெளியாவது உறுதியாகிவிட்டது. இந்த பட்ஜெட்டில் சிப்செட், பேட்டரி மற்றும் கேமரா அம்சங்கள் பக்காவாகவே இந்த போனில் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








