Home
Mobile

பொளக்கும் பட்ஜெட்.. ரூ.13,499 போதும்.. 12GB ரேம்.. EIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்த போன் வரட்டும், அதற்கு அப்புறம் புது போன் வாங்குறத பத்தி யோசிக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு கம்மி பட்ஜெட்டில் 12ஜிபி ரேம், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G) வரவிருக்கிறது.

ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z9x 5G Specifications): இந்த ஐக்யூ மாடலில் மிட்-ரேஞ்ச் பர்பாமென்ஸ் மற்றும் பக்கா கேமிங் அவுட்புட் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

பொளக்கும் பட்ஜெட்.. ரூ.13,499 போதும்.. 12GB ரேம்.. EIS கேமரா மாடல்!

இந்த ஐக்யூவில் 1 டிபிக்கான எஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது. 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

6.72 இன்ச் (2408×1080 பிக்சல்கள்) ஃபுல் எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மாடலாகும். 16.7 மில்லியன் கலர் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி, ஆட்டோபோகஸ் (Auto Focus) மற்றும் 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் சப்போர்ட் வருகிறது.

பொளக்கும் பட்ஜெட்.. ரூ.13,499 போதும்.. 12GB ரேம்.. EIS கேமரா மாடல்!

அதேபோல 4K வீடியோ ஷூட் மற்றும் டைனாமிக் போட்டோ (Dynamic Photo), நைட் சீன் (Night Scene), போர்ட்ராய்டு (Portrait), மைக்ரோ மூவி (Micro Movie), ஹை-பிக்சல் (High Pixel) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. போர்ட்ராய்டு பீச்சர் (Portrait Feature) சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) வருகிறது. இந்த போனின் பேட்டரி சிஸ்டம் பட்ஜெட்டிலும் பட்டையை கிளப்புகிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி (Type-C) போர்ட் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது.

பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டிருந்தாலும், 7.99 மிமீ தடிமன் மற்றும் 199 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது. பட்ஜெட் மாடல்களில் வரும் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது.

IP64 ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்டார்பர்ஸ்ட் ஒயிட் (Starburst White), ஃபெங் யுகிங் கிரீன் (Feng Yuqing Green) மற்றும் டார்க் நைட் பிளாக் (Dark Night) ஆகிய கலர்கள் கொண்டிருக்கிறது. மேற்கூறிய அம்சங்கள் சீன வேரியண்ட்டின் அடிப்படையில் கசிந்தவை மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவில்லை.

இருப்பினும், இதே அம்சங்களுடன் இந்தியாவில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே மாதத்துக்குள் இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போன் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.13,499ஆக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், இதே அம்சங்களுடன் வேறு டிசைனில் விவோ டி3எக்ஸ் இந்தியாவில் விற்பனையாகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z9x 5G With 50MP Camera, 12GB RAM, 6000mAh Battery Launch Soon India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X