Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.18,000 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த மாடல்?

அமேசான் (Amazon) தளத்தில் ஐக்யூ இசட்9எஸ் (iQOO Z9s) போனுக்கு விலை குறைப்பு மட்டுமல்லாமல், கூடுதலாக பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பிரீமியம் லுக்கில் 5500mAh பேட்டரி, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் மெயின் கேமரா போன்ற பீச்சர்களுடன் கிடைக்கிறது. இந்த ஐக்யூ இசட்9எஸ் போனின் விலை, விற்பனை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஐக்யூவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் விலை குறைப்பு மற்றும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.18,000 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி!

8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டை இப்போது ரூ.18,998 விலையில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இது ரூ.1,001 விலை குறைப்பில் கிடைப்பதாகும். இதுபோக குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,998 பட்ஜெட்டில் இந்த ஐக்யூ இசட்9எஸ் போனை வாங்கி கொள்ள முடியும். இதேபோல மற்ற வேரியண்ட்களுக்கும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

மேலும், ரூ.18,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ஈஎம்ஐ போன்ற ஆப்ஷனும் இருக்கிறது. இந்த ஐக்யூ இசட்9எஸ் போனில் டைட்டானியம் மேட் (Titanium Matte) மற்றும் ஓனிக்ஸ் கிரீன் (Onyx Green) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. 3டி கர்வ்ட் டிஸ்பிளே டிசைன் மட்டுமல்லாமல், வெறும் 7.49 எம்எம் தடிமன் மட்டுமே இருக்கிறது. இப்போது மற்ற பீச்சர்களை பார்க்கலாம்.

ஐக்யூ இசட்9எஸ் அம்சங்கள் (iQOO Z9s Specifications): 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட்டுடன் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷனை கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) உள்ளது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.18,000 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி!

இந்த பட்ஜெட்டில் மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகரான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொடுக்கிறது. இந்த கிராபிக்ஸ் கார்டு மற்றும் எச்டிஆர்10பிளஸ் கிடைப்பதால், கேமிங் அவுட்புட் பக்காவாக இருக்கும்.

முன்பே சொன்னதை போல சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 16 எம்பி செலபீ ஷூட்டரை இந்த ஐக்யூ இசட்9எஸ் போன் கொடுக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது.

கர்வ்ட் டிஸ்பிளே கிடைத்தும், கொஞ்சம் அதிக பேக்கப் கொடுக்கும்படி 5500mAh பேட்டரி வருகிறது. இதற்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை பார்க்க முடிகிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஓகேவாகவே இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z9s With 8GB RAM Gets Discount in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X