Amazon ஆஃபர்.. ரூ.18000 பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஐக்யூ பிரியர்கள் அறக்க பறக்கும் விதமாக அமேசான் எலக்ட்ரானிக் ஃபெஸ்டிவ் விற்பனையில் (Amazon Electronics Festive Sale) ஐக்யூ மாடல்களுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல பாதிக்கும் மேல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. இந்த விற்பனையில் ஐக்யூ இசட்9எஸ் (iQOO Z9s) போனின் ஆர்டர் பட்டையை கிளப்புகிறது. கர்வ்ட் டிஸ்பிளே, சோனி கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களை பேக் செய்துள்ள இந்த ஐக்யூ இசட்9எஸ் போனின் முழு விவரங்கள் இதோ.
ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு 3டி கர்வ்ட் டிஸ்பிளே போன்கள் மீது தனி ஆர்வம் இருக்கும். இருப்பினும், 3டி டிஸ்பிளே மட்டுமல்லாமல், ரெஃப்ரெஷ் ரேட், ரெசொலூஷன், பீக் பிரைட்னஸ் போன்ற மற்ற பீச்சர்களையும் பார்த்து வாங்க வேண்டும். அப்போதுதான், அதற்கு ஏற்க அவுட்புட் எதிர்பார்க்க முடியும். இப்படிப்பட்ட பீச்சர்களை பட்ஜெட்டில் இந்த ஐக்யூ இசட்9எஸ் பேக் செய்துள்ளது.

ஐக்யூ இசட்9எஸ் விலை (iQOO Z9s Price): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,998ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, அமேசான் எலக்ட்ரானிக் ஃபெஸ்டிவ் விற்பனையில் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 டிஸ்கவுண்ட் உடன் ஆர்டருக்கு வந்துள்ளது. இதுபோக கஸ்டமர்களுக்கு ரூ.18,900 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.
ஆகவே, ரூ.18,998 பட்ஜெட்டில் இந்த ஐக்யூ இசட்9எஸ் போனை வாங்கி கொள்ள முடியும். அதேபோல ரூ.21,998 விலை கொண்ட 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலுக்கும் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த மாடலுக்கு ரூ.20,750 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. இந்த போனானது, என்னென்ன பீச்சர்களை பேக் செய்துள்ளது?

ஐக்யூ இசட்9எஸ் அம்சங்கள் (iQOO Z9s Specifications): இந்த போனில் 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D Curved AMOLED Display) வருகிறது. ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட்டை பேக் செய்துள்ளது. இதுபோக எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
ஆகவே, டிஸ்பிளேவில் குவாலிட்டி அவுட்புட் கட்டாயம் எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில், 7.49 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி கொண்டிருக்கிறது. இது ஹேண்டி மற்றும் பிரீமியம் லுக் கொடுக்கும். ஐக்யூவின் வழக்கமான ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேக் செய்யப்பட்டுள்ளது.
மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைக்கும் போன்களில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட்டை பேக் செய்துள்ளது. இந்த சிப்செட்டில் கேமிங் அவுட்புட் மிட்-பிரீமியமாக எதிர்பார்க்கலாம். இந்த ஐக்யூ இசட்9எஸ் மாடலில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பெரிய 5500mAh பேட்டரி வருகிறது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா வருகிறது. ஆகவே, போர்ட்ராய்டு அவுட்புட் மற்றும் பீச்சர்கள் பக்காவாக இருக்கும். மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி வருகிறது. ஐக்யூவின் கேமரா-செண்ட்ரிக் போன்களில் வரும் ஆரா லைட் (Aura Light) வருகிறது.
4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (in-display Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த போனை டைட்டானியம் மேட் (Titanium Matte) மற்றும் ஓனிக்ஸ் கிரீன் (Onyx Green) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 5ஜி கனெக்விட்டி உள்ளது.


Click it and Unblock the Notifications