Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.17,999 போதும்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் டிஸ்கவுண்ட்டில் (Amazon Discount) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் மெயின் கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட ஐக்யூ இசட்9எஸ் (iQOO Z9s) போனின் விற்பனை பட்டையை கிளப்பி வருகிறது. இப்போது, ஆர்டர் செய்தால், பேங்க் டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், எந்தவொரு டெபிட் அல்லது கிரெடிட் கார்டு இல்லாமலேயே கூப்பன் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். இந்த ஐக்யூ இசட்9எஸ் போனின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஐக்யூ இசட்9எஸ் அம்சங்கள் (iQOO Z9s Specifications): இந்த ஐக்யூ மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Octa Core 4nm MediaTek Dimensity 7300) சிப்செட் மற்றும் மாலி ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. பக்கா கேமரா பீச்சர்களுடன் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) வருகிறது.

யாரு சாமி அவன்.. ரூ.17,999 போதும்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. மாடல்?

3டி கர்வ்ட் டிஸ்பிளே டிசைனில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த டிசைனுக்கு ஏற்ப 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், ஓடிடி பிரியர்கள் விரும்பும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது.

இதுபோக பர்ஃபாமென்ஸ் பக்கம் பார்க்கையில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுமல்லாமல், 300Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கிறது. இந்த ஐக்யூ இசட்9எஸ் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. இதுபோக, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலும் கிடைக்கிறது.

நைட் போட்டோகிராபி மற்றும் போர்ட்ராய்டு போட்டோகிராபிக்காக ஆரா லைட் (Auro Light) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera) கிடைக்கிறது. பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி அவுட்புட் எதிர்பார்க்க முடிகிறது.

ஏனென்றால், சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் பேக் செய்துள்ளது. இதுபோக ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) சப்போர்ட் இந்த கேமராவில் கிடைக்கிறது. மேலும், மெயின் கேமராவில் 4K வீடியோ ஷூட் சப்போர்ட் உள்ளது.

கர்வ்ட் டிஸ்பிளே போன்களில் பேட்டரி கேபாசிட்டி கம்மியாக இருக்கும். ஆனால், இந்த போனில் 5500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி இருந்தும் 7.49 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. மேலும், 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. இதுபோக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது.

ஐக்யூ இசட்9எஸ் அமேசான் டிஸ்கவுண்ட் (iQOO Z9s Amazon Discount): இந்த ஐக்யூவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1500 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.2000 டிஸ்கவுண்ட் போக ரூ.17,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z9s With 50MP Camera Sale Under Rs 18000 in Amazon Discount Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X