யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
யாரு சாமி அவன், இந்த பட்ஜெட்ல 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களை பேக் செய்றது என்று மூக்கில் விரல் வைக்கும்படியான விலைக்கு ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ (iQOO Z9s Pro) போன் ஆர்டருக்கு வந்துள்ளது. அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் போக கம்மி பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ டிஸ்கவுண்ட் விற்பனை (iQOO Z9s Pro Discount Sale): இந்த ஐக்யூவின் டாப் எண்ட் மாடலான 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,998 ஆக இருக்கிறது. ஆனால், அமேசான் விற்பனையில் ரூ.3,250 உடனடி டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.25,748 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கி கொள்ளலாம்.

இந்த டிஸ்கவுண்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது. ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால் மட்டுமே ரூ.3,250 டிஸ்கவுண்ட் கிடைக்கும். இல்லையென்றால், ரூ.3000 டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். அதேபோல எஸ்பிஐ டெபிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கும். மேலும், ரூ.27,500 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது.
ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ அம்சங்கள் (iQOO Z9s Pro Specifications): இந்த ஐக்யூவில் அல்ட்ரா பிரீமியம் கேமரா மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் வருகின்றன. கேமராவை பார்க்கையில், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் சோனி ஐஎம்எக்ஸ் 882 (Sony IMX 882) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. ஆரா லைட் (Aura Light) பேக் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. இந்த கேமராவில் லோவ் லைட் போட்டோகிராபிக்காக சூப்பர் நைட் மோட் (Super Night Mode) வருகிறது. பிரீமியும் கேமரா அவுட்புட் கொடுக்கும் பிளர்ட் பேக்ரவுண்ட் போர்ட்ராய்ட் மோட் (Portrait Mode) வருகிறது.
மேலும், ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance) போன்ற ஏஐ பீச்சர்களும் பேக் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, கேமராவில் பின்னிப்பெடல் எடுக்கும் அவுட்புட் எதிர்பார்க்கலாம். டிஸ்பிளேவை பார்க்கையில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D Curved AMOLED Display) வருகிறது.
இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) வருகிறது. கூடவே 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருவதால், அவுட்டோர் அவுட்புட் பட்டையை கிளப்பும்படி இருக்கும். மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.
அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஐக்யூவின் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ போனில் 5500mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. ப்ளாம்பாயன்ட் ஆரஞ்சு மற்றும் லக்ஸ் மார்பிள் ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது.


Click it and Unblock the Notifications








