மிரளுது அமேசான்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. 16GB ரேம்.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போடும்படியான டிஸ்கவுண்ட் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவ் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) கிடைக்க இருக்கிறது. ஐக்யூ இசட்9எஸ் (iQOO Z9s) மாடலுக்கும், ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ (iQOO Z9s Pro) மாடலுக்கும் கிடைக்காத டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த மாடல்களின் பீச்சர்கள் எப்படி? டிஸ்கவுண்ட் எவ்வளவு? விலை என்ன? விற்பனை தேதி எப்போது? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ அம்சங்கள், விலை (iQOO Z9s Pro Specifications Price): இந்த ப்ரோ மாடலில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) டிசைன் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் கொண்டிருக்கிறது. ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14), ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது.
மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ் 882 (Sony IMX 882) சென்சார் வருகிறது. கர்வ்ட் டிசைனில் ஸ்லிம் பாடி கொண்டிருந்தும், 5500mAh பேட்டரியை கொண்டிருக்கிறது. இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ மாடலை ப்ளாம்பாயன்ட் ஆரஞ்சு (Flamboyant Orange) மற்றும் லக்ஸ் மார்பிள் (Luxe Marble) கலர்களில் வாங்கலாம்.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவ் விற்பனையில் ரூ.21,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது. ரூ.1500 மதிப்பிலான கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 3 அல்லது 6 மாதங்களுக்கான நோகாஸ்ட் ஈஎம்ஐ கிடைக்க இருக்கிறது.

ஐக்யூ இசட்9எஸ் அம்சங்கள், விலை (iQOO Z9s Specifications Price): இந்த மாடலிலும் ஃபுல்எச்டி ரெசொலூஷன் கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. அதேபோல 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. ஃபன்டச்ஓஎஸ் 14 மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வருகிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் வருகிறது. இந்த ஐக்யூ மாடலில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. டைட்டானியம் மேட் (Titanium Matte) கலர் உள்ளது.
அதேபோல ஓனிக்ஸ் கிரீன் (Onyx Green) கலரும் கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவ் விற்பனையில் ரூ.17,499 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. இந்த விற்பனை வரும் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








