Home
Mobile

ஆகஸ்ட் 21 உறுதி.. Sony கேமரா.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது புதிய ஐக்யூ போன்.. எந்த மாடல்? என்ன விலை?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ 5ஜி (iQOO Z9s Pro 5G) மற்றும் ஐக்யூ இசட்9எஸ் 5ஜி (iQOO Z9s 5G) போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த இரண்டு போன்களும் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி அறிமுகம் செய்யப்படும். தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த இரண்டு இரண்டு போன்களும் வெளிவரும். இந்நிலையில் ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ 5ஜி போன்களின் முக்கிய அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ 5ஜி அம்சங்கள் (iQOO Z9s Pro 5G Specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டி ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

ஆகஸ்ட் 21 உறுதி.. Sony கேமரா.. வருகிறது புதிய ஐக்யூ போன்..

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் (50MP Sony IMX882) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் 4கே வீடியோ ரெக்கார்டிங், சூப்பர் நைட் மோட் ஏஐ எரேசர், ஏஐ போட்டோ உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனின் கேமராவில் உள்ளன. அதேபோல் 32எம்பி செல்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி இரண்டு வேரியண்ட்களில் ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ 5ஜி போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஆகஸ்ட் 21 உறுதி.. Sony கேமரா.. வருகிறது புதிய ஐக்யூ போன்..

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3டி அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ 5ஜி போன் அறிமுகமாகும். மேலும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இதன் டிஸ்பிளே ஒரு தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.

5500எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஆகஸ்ட் 21 உறுதி.. Sony கேமரா.. வருகிறது புதிய ஐக்யூ போன்..

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ 5ஜி போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

குறிப்பாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஐக்யூ போனில் உள்ளன. அதேபோல் இந்தியாவில் ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ 5ஜி போன் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய ஐக்யூ போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z9s Pro 5G will be launched in India on August 21: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X