Home
Mobile

அடுத்த 1 வாரத்துக்கு எந்த போனும் வாங்கிடாதீங்க.. ஆக.21-ல் வரும் 2 iQOO போன்கள்.. என்ன மாடல்? என்ன விலை?

2024 ஆகஸ்ட் மாதத்தை பாதி கடந்துவிட்டோம். ஆக.1 தொடங்கி இன்று வரையிலாக இந்திய சந்தையில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. அந்த பட்டியலில் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி, மோட்டோரோலா எட்ஜ் 50, ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன், விவோ வி40 சீரீஸ், ரியல்மி சி63 5ஜி, பிக்சல் 9 சீரீஸ் ஆகிய மாடல்கள் முக்கியமான அறிமுகங்களாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை இதுவரை அறிமுகமான எந்த போன்களுமே உங்கள் ஆர்வத்தை தூண்டும்படி இல்லை என்றால், உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அம்சங்களை பேக் செய்யவில்லை என்றால்.. கவலையே வேண்டாம்!

ஏனென்றால் மீதமுள்ள பாதி மாதத்தில் இன்னும் பல புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அதில் ஐக்யூ பிராண்டின் கீழ் வரும் 2 புதிய மாடல்களும் அடங்கும். அதென்ன மாடல்கள்? இவ்விரு ஸ்மார்ட்போன்களும் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ஆக.21-ல் வரும் 2 iQOO போன்கள்.. என்ன மாடல்? என்ன விலை?

என்ன மாடல்கள்? அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது - ஐக்யூ இஸட்9எஸ் (iQOO Z9s) மற்றும் ஐக்யூ இஸட்9எஸ் ப்ரோ (iQOO Z9s Pro) ஸ்மார்ட்போன்கள் தான். இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ஐக்யூ நிறுவனம் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு, கலர் ஆப்ஷன்கள் மற்றும் சிப்செட் விவரங்களை ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு விட்டது. இப்போது, டிஸ்பிளே, கேமரா, பேட்டரி, சார்ஜிங் திறன் மற்றும் ஐபி ரேட்டிங் உள்ளிட்ட பல அம்சங்களை உறுதிப்படுத்தி உள்ளது.

அதன்படி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 SoC) மூலம் இயக்கப்படும், மறுகையில் உள்ள ஐக்யூ இஸட்9எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட்டை (Snapdragon 7 Gen 3 Chipset) பெறும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை ஐக்யூ இஸட்9எஸ் மற்றும் ஐக்யூ இஸட்9எஸ் ப்ரோ ஆகிய இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 3D கர்வ்டு AMOLED டிஸ்பிளேக்களை கொண்டிருக்கும் என்பதை ஐக்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மைக்ரோசைட் உறுதிப்படுத்தியுள்ளது. வேறுபாடுகளை பொறுத்தவரை ப்ரோ வேரியண்ட் ஆனது 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் வரும்.

மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்காக IP64 ரேட்டிங் கட்டமைப்புகளுடன் வருவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கூடவே ஐக்யூ இஸட்9எஸ் மற்றும் ஐக்யூ இஸட்9எஸ் ப்ரோ ஆகிய இரண்டுமே 5,500mAh பேட்டரிகளை பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை ப்ரோ வேரியண்ட் ஆனது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, ஐக்யூ இஸட்9எஸ் மற்றும் ஐக்யூ இஸட்9எஸ் ப்ரோ ஆகிய இரண்டுமே டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும். இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் IMX882 ப்ரைமரி சென்சார் இடம்பெறும். முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை, பேஸிக் வேரியண்ட்டில் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் இருக்கும், அதே சமயம் ப்ரோ வேரியண்ட்டில் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா இருக்கும்.

இருப்பினும் இரண்டு ஸ்மார்ட்போன்களின் கேமரா செட்டப்களுமே 4கே OIS-ஆதரவு வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும். மேலும் ஏஐ போட்டோ அப்கிரேட் மற்றும் ஏஐ ஏரேசர் போன்ற அம்சங்களையும் வழங்கும். கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை வெண்ணிலா வேரியண்ட் - ஓனிக்ஸ் கிரீன் மற்றும் டைட்டானியம் மேட் ஷேட்களில் அறிமுகமாகும்; ப்ரோ வேரியண்ட் ஆனது - Flamboyant Orange மற்றும் Luxe Marble கலர்களில் வரும்.

என்ன விலைக்கு வரும்? இந்தியாவில் ஐக்யூ இஸட்9எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.18,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ஐக்யூ இஸட்9எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.24,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். சரியான விலை நிர்ணயம் ஆகஸ்ட் 21 நடக்கும் வெளியீட்டின் போது அறிவிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
QOO Z9s iQOO Z9s Pro India Launch Date August 21 Major Specifications Revealed Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X