மிஸ் பண்ணிடாதீங்க.. பட்ஜெட்ல தெறிக்க விடும் iQOO Z9s Pro.. iQOO Z9s.. விலை கம்மியோ கம்மி.. சேல் நாள் இதான்..
விவோ (Vivo) நிறுவனத்திற்கு சொந்தமான iQOO இன்று இந்தியாவில் இரண்டு அட்டகாசமான பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாதனங்களை அதன் Z9 சீரிஸ் வரிசையின் கீழ் அறிமுகம் செய்துள்ளது. இதில் புதிய iQOO Z9s மற்றும் iQOO Z9s Pro ஆகிய இரண்டு மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சம் மற்றும் இதன் விலை மற்றும் விற்பனை விபரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். பட்ஜெட் செக்மென்ட் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போன்களுக்கு இப்போதே இந்தியாவில் மவுசு அதிகரித்துள்ளது. காரணம் இதில் உள்ள அம்சங்கள் மற்றும் இதன் மலிவு விலையே.
புதிய iQOO Z9s மற்றும் iQOO Z9s Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6.7" இன்ச் கொண்ட 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களும் FHD+ தீர்மானம் மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்தை வழங்குகின்றன. Z9s Pro ஆனது 4,500 nits இன் பீக் பிரைட்னஸ் உடன் தனித்து நிற்கிறது. மறுபுறம் Z9s ஸ்மார்ட்போன் சாதனம் 1,800 நீட்ஸ் பீக் பிரைட்னஸை வழங்குகிறது.

புதிய iQOO Z9s மற்றும் iQOO Z9s Pro போன்கள்:
வடிவமைப்பு வாரியாக, iQOO Z9s ஆனது Vivo V40 தொடரைப் போன்ற பில் வடிவ கேமரா தொகுதியைக் கொண்டுள்ளது. கேமரா சென்சார்களுக்கான இரண்டு நீள்வட்ட வடிவங்கள் மற்றும் ஆரா லைட் எல்.ஈ.டி லைட்களை பெற்றுள்ளது. மறுபுறம் iQOO Z9s Pro ஆனது iQOO 12 இல் காணப்படும் ஒரு ஸ்குயர் சர்க்கிள் ஐலேண்ட் வடிவமைப்பை பெற்றுள்ளது. இரண்டு ஃபோன்களும் அவற்றின் பிரிவில் மெலிதானவையாகும், வளைந்த டிஸ்பிளேக்களைகொண்டுள்ளன.
iQOO Z9s மற்றும் iQOO Z9s Pro கேமரா விபரம்:
iQOO Z9s தொடரில் டூயல் பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களிலும் OIS ஆதரவுடன் 50MP Sony IMX882 முக்கிய சென்சார் உள்ளது. Z9s ஆனது 2MP போர்ட்ரெய்ட் லென்ஸைக் கொண்டுள்ளது. iQOO Z9s Pro ஆனது கூடுதலாக 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் யூனிட்டுடன் வருகிறது. கூடுதல் அம்சங்களில் AI விருப்பங்களை இந்த போன் பெறுகிறது. இரண்டு போன்களும் 4K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவை கொண்டுள்ளது.
iQOO Z9s மற்றும் iQOO Z9s Pro சிப்செட்:
ஹூட்டின் கீழ், iQOO Z9s ஆனது டைமென்சிட்டி 7300 (Dimensity 7300) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. iQOO Z9s Pro ஆனது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட்டைப் பயன்படுத்துகிறது. இவை 12 ஜிபி ரேம் உடனும், iQOO Z9s Pro சாதனம் 16 ஜிபி ரேம் உடனும் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வரையிலான ஆதரவை கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் ஒரு VC லிக்விட் கூலிங் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது.
iQOO Z9s மற்றும் iQOO Z9s Pro விலை:
இரண்டு போன்களும் 5,500mAh பேட்டரியை பேக் செய்கிறது. இருப்பினும், iQOO Z9s Pro சாதனம் 80W பாஸ்ட் சார்ஜிங் திறனுடன் வருகிறது. iQOO Z9s சாதனம் 44W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. iQOO Z9s ஆனது Onyx Green மற்றும் Titanium Matte வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 8GB + 128GB வகைக்கு ரூ.19,999 விலையும், மற்றும் 8GB + 256GB மாடலுக்கு ரூ.21,999 விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
12 ஜிபி + 256 ஜிபி கொண்ட டாப்-டையர் ஆப்ஷனின் விலை ரூ.23,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. iQOO Z9s Pro ஆனது Flamboyant Orange மற்றும் Luxe Marble நிறங்களில் வருகிறது. இதன் அடிப்படை மாடலான 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 24,999 ஆகவும், ஹை - எண்டு மாடலான 16 ஜிபி + 256 ஜிபி விலையிலும் ரூ. 28,999 பட்டியலிடப்பட்டுள்ளது. iQOO Z9s போனுக்கான விற்பனை அமேசானில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்குகிறது. iQOO Z9s Pro விற்பனை ஆகஸ்ட் 23 முதல் துவங்குகிறது.


Click it and Unblock the Notifications








