Home
Mobile

அமேசான் அதிர போகுது.. சோனி கேமரா.. ஐபி65 ரேட்டிங்.. தள்ளுபடி விலையில் iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் (amazon) தளத்தில் ஐக்யூ இசட்9எஸ் 5ஜி (iQOO Z9s 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் டைமன்சிட்டி சிப்செட், 5500எம்ஏஎச் பேட்டரி, சோனி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது ஐக்யூ இசட்9எஸ் 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் ஐக்யூ இசட்9எஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.17,999 விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசான் அதிர போகுது.. தள்ளுபடி விலையில் iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

ஐக்யூ இசட்9எஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z9s 5G Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் ஐக்யூ இசட்9எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392 x 1080 பிக்சல்ஸ், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் வசதியுடன் இந்த ஐக்யூ இசட்9எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த போனுக்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 882 மெயின் சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஐக்யூ இசட்9எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. பின்பு ஆரா லைட் (Aura light)ஆதரவுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் ஐக்யூ இசட்9எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ஐக்யூ போனில் உள்ளன.

IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் ஐக்யூ இசட்9எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவு இந்த போனில் உள்ளன.

5500mAh பேட்டரி உடன் ஐக்யூ இசட்9எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z9s 5G phone is available at discounted price on Amazon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X