மார்ச் 12 காலி.. எதிர்பார்க்காத பட்ஜெட்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 300Hz டச் சாம்பிளிங்.. எந்த போன்?
ஐக்யூ பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கேமரா பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார், டைமன்சிட்டி 7200 சிப்செட் போன்ற அம்சங்களை கொண்ட ஐக்யூ இசட்9 (iQOO Z9) போனின் டிஸ்பிளே அம்சங்கள் வெளியாகி மேலும் எதிர்பார்ப்பை எகிறவிட்டுள்ளது.
இந்த ஐக்யூ இசட்9 மாடலானது, வரும் மார்ச் 12ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இதனிடையே கேமரா, சிப்செட், டிசைன், கலர் வேரியண்ட் போன்ற அம்சங்கள் அடுத்தடுத்து வெளியாகி மார்கெட்டை மிரளவிட்டது. இப்போது, கேமிங் பிரியர்களுக்கான டிஸ்பிளே அம்சங்களை உறுதி செய்து இருக்கிறது.

ஐக்யூ இசட்9 அம்சங்கள் (iQOO Z9 Specifications): இந்த ஐக்யூ போனில் பிளாட்-எட்ஜ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) வருகிறது.
அதுமட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்கான மோஷன் கன்ட்ரோல் (Motion Control) மற்றும் 1200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் (Instant Touch Sampling Rate) வருகிறது. இதுவொரு 6.6 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே மாடலாகும். மீடியாடெக் டைமன்சிட்டி 7200 (MediaTek Dimensity 7200) சிப்செட் கொண்டிருக்கிறது.
ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்டிருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் (Selfie Shooter) கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் சோனி ஐஎம்எக்ஸ்882 கொண்ட முதல் போனாக இது இருக்கிறது.

44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் (Ultra Slim Design) 7.83 மிமீ தடிமன் மட்டுமே கொண்டிருக்கிறது. பிரஷ்டு கிரீன் (Brushed Green) மற்றும் கிராபெனின் ப்ளூ (Graphene Blue) ஆகிய 2 கலர்களில் வெளியாகிறது. இந்த அம்சங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன.
இருப்பினும், மீதமுள்ள அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன. ஆகவே, இந்த போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் ஆகிய கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டுள்ளது.
அதோடு ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) சப்போர்ட் வருகிறது. 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது.
இந்த ஐக்யூ இசட்9 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.20,000 பட்ஜெட்டிலும், டாப் வேரியண்ட்டின் விலை ரூ.25,000 பட்ஜெட்டிலும் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, கேமரா மற்றும் கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக இந்த போன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








