இதான்பா பட்ஜெட்.. ரூ.17,999 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், டைமன்சிட்டி 7200 சிப்செட், 5000mAh பேட்டரி போன்ற பக்கா அம்சங்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனோடு பட்ஜெட்டில் ஐக்யூ இசட்9 (iQOO Z9) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
ஐக்யூ இசட்9 அம்சங்கள் (iQOO Z9 Specifications): இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 7200 எஸ்ஓசி சிப்செட் மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) வருகிறது. 2 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கப்படுகிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி610 எம்சி4 ஜிபியு (Mali G610 MC4 GPU) கிராபிக்ஸ் வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dyanamic RAM) சப்போர்ட் வருகிறது. அதோடு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது.
2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ஐக்யூவில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, சோனிஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி பிரைமரி கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் (Depth Sensor) வருகிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS), ஈஐஎஸ் (EIS) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.
அதேபோல 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ கேமர வருகிறது. மிட்-ரேஞ்ச் டிஸ்பிளே பீச்சர்களை கொண்டிருக்கிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு அமோலெட் (AMOLED) டிஸ்பிளே பேனலாகும்.

அதோடு 360Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு டிடி ஸ்டார்2 கிளாஸ் புரொடெக்சன் (DT Star2 Glass Protection) வருகிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகிறது.
அதேபோல டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) வருகிறது. இந்த ஐக்யூ இசட்9 போனில் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் வருகிறது. IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொண்டிருக்கிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. கிராபீன் ப்ளூ (Graphene Blue) மற்றும் பிரஷ்டு கிரீன் (Brushed Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல 8ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 128 ஜிபி வேரியண்ட்டை வெறும் ரூ.17,999 பட்ஜெட்டில் வாங்கலாம். மார்ச் 13ஆம் தேதி எர்லி அக்சஸ் சேல் மற்றும் 14ஆம் தேதி ஓப்பன் சேல் தொடங்குகிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








